'நீயா நானா' சூப்பர் அப்பா சீனி ராஜாவுக்கு இப்படி ஒரு பிரச்சனையா? விமர்சனங்களால் கண்ணீர் விட்டு கதறிய மனைவி!

நீயா நானா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய சீனி ராஜா - பாரதி தம்பதி குறித்து தான் சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. இது குறித்து... மிகவும் உருக்கமாக இந்த தம்பதிகள் பகிர்ந்து கொண்டுள்ள தகவல்கள் இதோ...
 

neeya nana super daddy seeni raja is a dialysis patient shocking truth

விஜய் டிவியில் கடந்த வாரம் ஞாயிறு கிழமை அன்று, கணவன் மார்களை விட அதிகமாக சம்பாதிக்கும் பெண்கள், பற்றிய டாப்பிக் தான் விவாதிக்கப்பட்டது. இதில் கலந்து கொண்ட கணவன்கள் பலர் அதிகம் சம்பாதிக்கும் மனைவி தங்களிடம் எப்படி நடந்து கொள்கிறார் என்று ஆதங்கத்தை நிகழ்ச்சியில் வெளிப்படுத்தியதை பார்க்க முடிந்தது.

குறிப்பாக இதில் கலந்து கொண்ட சீனி ராஜா என்பவர் தன்னுடைய மகளின் பிரகரஸ் ரிப்போர்ட்டை அதிக நேரம் பார்ப்பார் என மனைவி குற்றச்சாட்டு ஒன்றை வைக்க, அதற்க்கு பதில் கூறிய கணவன், தன்னால் செய்ய முடியாததை தன்னுடைய மகள் குணாஷினி செய்கிறார். ஓவ்வொரு பாடத்திலும் 70 , 80 என அவர் மார்க் எடுத்துள்ளதை தான் பூரித்து ஒரு மணிநேரம் பார்ப்பேன் என கூறியது, ஒரு சிறந்த தந்தைக்கான காவியமாக தான் தெரிகிறது என, சிறந்த தந்தைக்கான பரிசை அவருக்கே கொடுத்து சிறப்பித்தார் கோபிநாத்.

மேலும் செய்திகள்: கே.எஸ்.ரவிக்குமாரால் துப்பாக்கியில் சுடப்பட்ட ரம்யா கிருஷ்ணனின் தாயார்! நூல் இடையில் உயிர் தப்பிய சம்பவம்!
 

neeya nana super daddy seeni raja is a dialysis patient shocking truth

மேலும் தற்போது தொழிலில் நஷ்டம் அடைந்து விட்டதால், மனைவியின் வீட்டில் உள்ள யாரும் தன்னை மதிப்பது இல்லை, ஒரே பேருந்தில் சுமார் 7 மணிநேரம் தன்னுடைய மைத்துனருடன் வந்த போது கூட, அவர் ஒரு வார்த்தை எப்படி இருக்கிறீர்கள் என கேட்கவில்லை. இதை தன்னுடைய மனையிடம் கூறியபோது அவரும் கண்டுகொள்ள வில்லை என கூறி ஆதங்கத்தை கொட்டினார். இதற்க்கு பாரதியும் நிலையான பதில் கொடுக்கவில்லை. எனவே பலர்,  பாரதிக்கு கணவருக்கு மரியாதை கொடுக்க வேண்டிய இடத்தில் கொடுங்கள் என தொடர்ந்து அட்வைஸ் கொடுத்து வந்தனர்.

மேலும் செய்திகள்: ரெட் வெல்வட் கேக் போல்... ஆண்டி வயதிலும் குட்டை கவுனில் கும்முனு போஸ் கொடுத்த கிரண்..! கிக் ஏற்றும் ஹாட் கிளிக
 

neeya nana super daddy seeni raja is a dialysis patient shocking truth

ஒரே நாளில் ஃபேமஸாக மாறி விட்ட இந்த தம்பதி தற்போது பல்வேறு ஊடங்கங்களுக்கு தொடர்ந்து பேட்டி கொடுத்து வருகிறார்கள். அப்படி கொடுத்த பேட்டி மூலம் தான் சீனி ராஜாவுக்கு பின்னால் மறைந்துள்ள சோகமும் வெளியாகியுள்ளது. சிறிய வயதில் படிப்பு வரவில்லை என்கிற காரணத்தால் மளிகை கடையில் வேலைக்கு சென்ற சீனி ராஜா, வேலை பளு காரணமாக சரியான நேரத்தில் சாப்பிடாமல், தண்ணீர் குடிக்காமல், சிறுநீர் கழிக்காமல் இருந்ததால்... சிறுநீரகம் சுருங்கி போய் விட்டதாக கூறி மருத்துவர்கள் அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.

neeya nana super daddy seeni raja is a dialysis patient shocking truth

ஒரு நிலையில் டயாலிசில் செய்து கொள்ளவேண்டும் என்கிற நிலைக்கு தள்ளப்பட்ட சீனி ராஜா கடந்த ஒரு வருடமாக அரசு காப்பீட்டுத்திட்டம் மூலம் டயாலிசிஸ் செய்து வருவதாக கூறியுள்ளார். தற்போது மளிகை கடையில் தன்னால் முடிந்த வேலைகளை செய்து வரும் நிலையில், மகளின் மருத்துவர் கனவை நிறைவேற்ற முடிந்தவரை உழைப்பதாக தெரிவித்துள்ளார்.

neeya nana super daddy seeni raja is a dialysis patient shocking truth

தனக்கு உடல் நிலை சரி இல்லாத காரணத்தால் தான், தன்னுடைய மனைவி வேலைக்கு செல்ல முடிவு செய்தார். அவர் தன்னை விட அதிகம் சம்பாதிப்பது எனக்கு உதவி செய்யத்தான் என கூறினார். இவரை தொடர்ந்து பேசிய அவரது மனைவி பாரதி... நான் வீட்டில் எப்போதுமே அவரை கிண்டல் செய்து கொண்டு தான் இருப்பேன், அதே போல் அங்கு பேசினேன் ஆனால் அனைவராலும் அது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. அதே நேரத்தில் abcd படித்து கொண்டு இருப்பார் என நான் பேசியது கட் செய்து விடுவார்கள் என நினைத்தேன்... ஆனால் அது தான் ட்ரோல் செய்யும் அளவுக்கு மாறியது. இந்த நிகழ்ச்சி மூலம் என்னுடைய கணவர் மீது தனக்கு மரியாதை அதிகரித்து விட்டதாக கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios