நடிகை நயன்தாரா (Nayanthara) ரோட்டோர கடையில் (Street shop ) பேரம் பேசி பேக் வாங்கும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

நடிகை நயன்தாரா ரோட்டோர கடையில் பேரம் பேசி பேக் வாங்கும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

தமிழ் சினிமாவில், லேடி சூப்பர் ஸ்டார் என்கிற அங்கீகாரத்தை பெற்றவர் நயன்தாரா. இவர் தமிழில் நடித்த அடுத்தடுத்த படங்கள் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. மேலும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்வு செய்து நடித்து முன்னணி நடிகர்களுக்கு இணையான வசூலை ஈட்டினார். எனவே இவரை வைத்து படம் எடுக்க தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் போட்டி போட்டு வருகிறார்கள்.

மேலும் செய்திகள்: இயக்குநர் சுசிகணேசன் இயக்கும் பாலிவுட் படத்தின் டைட்டில் வெளியானது!

தற்போது தமிழ், மலையாளம், தெலுங்கு, ஆகிய மொழிகளை தாண்டி பாலிவுட் திரையுலகிலும் கால் பதித்து விட்டார். இயக்குனர் அட்லீ ஷாருக் கானை வைத்து இயக்கி வரும் படத்தில், நடிகை நயன்தாரா தான் நாயகியாக நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில், ஷாருக்கானின் மகன் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டதன் காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்: சிரஞ்சீவி சார்ஜாவை மகாராணியாக மாறி வரையும் மேக்னா ராஜ்..! கணவர் பிறந்தநாளில் வைரலாகும் ஸ்பெஷல் போட்டோ ஷூட்.!

மேலும் நயன்தாரா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடித்துள்ள 'அண்ணாத்த' திரைப்படம் வரும் தீபாவளிக்கு திரையரங்கில் பிரம்மாண்டமாக ரிலீசாக உள்ளது. இதை தொடர்ந்து, காதலர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள 'காத்துவாக்குல ரெண்டு காதல்' படத்தின் ரிலீஸ் தேதியும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்: குழந்தை பிறந்தபின் கூடிய அழகு... வெள்ளை நிற சல்வாரில் தேவதை போல் மின்னும் நடிகை ஸ்ரேயா..!

அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வந்தாலும், கோடிகளில் சம்பளம் வாங்கினாலும் தற்போது நயன்தாரா ரோட்டு கடை ஒன்றில் பேரம் பேசி பேக் வாங்குவது போன்ற வீடியோ சமூக வலைத்தளத்தில் தீயாக பரவி வருகிறது. அதே நேரத்தில் இந்த வீடியோ, திரைப்படத்திற்காக எடுக்கப்பட்டதா? அல்லது உண்மையிலேயே நயன்தாரா ரோட்டுக் கடையில் பேரம் பேசி கை பை வாங்கினாரா என்பது தெரியவில்லை.

Scroll to load tweet…