குழந்தை பிறந்தபின் கூடிய அழகு... வெள்ளை நிற சல்வாரில் தேவதை போல் மின்னும் நடிகை ஸ்ரேயா..!
நடிகை ஸ்ரேயா (Shreya Saran), சமீபத்தில் தன்னுடைய குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டு குழந்தை பிறந்த தகவலை வெளியிட்ட நிலையில், தற்போது இவர் வெள்ளை நிற சல்வாரில் அழகு தேவதையாய் ஜொலிக்கும் புகைப்படங்கள் இதோ...
திருமணத்திற்கு பின்பும் முக்கிய கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வரும் நடிகை ஸ்ரேயா, முதல் முறையாக வீடியோ ஒன்றை வெளியிட்டு தனக்கு குழந்தை பிறந்த ரகசியத்தை கடந்த வாரம் வெளிப்படுத்தினார்.
கர்ப்பமான தகவலை வெளியிடாமல் ரகசியமாக வைத்திருந்த ஸ்ரேயா, குழந்தை பிறந்து 6 மாதத்திற்கு பின்பு தான் இந்த தகவலை வெளியிட்டுள்ளார் .
திடீர் என ஸ்ரேயா இந்த தகவலை வெளியிட்டது அவரது ரசிகர்களை மிகவும் அதிர்ச்சியடைய செய்தது. மேலும் தொடர்ந்து பலர் தங்களுடைய வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.
திருமணம் ஆகி குழந்தை பெற்று கொண்டாலும், தொடர்ந்து திரைப்படங்கள் நடிப்பதில் இவர் கவனம் செலுத்தி வருகிறார்.
இவரது கைவசம் தற்போது 4 தெலுங்கு திரைப்படம் மற்றும் ஒரு ஹிந்தி படம் உள்ளது. தமிழில் இவர் நடித்த 'சண்டைக்காரி' படம் விரைவில் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்ட்டிவாக இருக்கும் ஸ்ரேயா அவ்வப்போது தன்னுடைய கணவருடன் எடுத்து கொண்ட ரொமான்டிக் புகைப்படம் மற்றும் தன்னுடைய அழகிய புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
அந்த வகையில் தற்போது வெள்ளை நிற சல்வாரில் தேவதை போல் ஜொலிக்கும் அழகிய புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார்.
குழந்தை பிறந்த பிறகு தான் கூடுதல் அழகில் நடிகை ஸ்ரேயா ஜொலிப்பதாக நெட்டிசன்கள் தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகிறார்கள்.