ஆர்.ஜே.பாலாஜி , என்.ஜே.சரவணன் இணைந்து இயக்கியுள்ள படம் மூக்குத்தி அம்மன். இதில் ஆர்.ஜே.பாலாஜி, நயன்தாரா, ஊர்வசி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்தில் நயன்தாரா அம்மன் கெட்டப்பில் நடிக்க விரதம் எல்லாம் இருந்தார். எல்.கே.ஜி படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்தையும் வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது. கன்னியாகுமரி மற்றும் சென்னையில் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் நடத்தி முடித்த படக்குழு தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளில் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க: அம்மனாக தரிசனம் தந்து பரவசப்படுத்திய நயன்தாரா... பட்டையைக் கிளம்பும் “மூக்குத்தி அம்மன்” செகண்ட் லுக்...!

மே மாதம் திரைக்கு வர உள்ள மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் முதல் போஸ்டரை சமீபத்தில் வெளியிட்டிருந்த படக்குழு, அதில் நயன் தாராவின் பாதி கெட்டப் மட்டுமே தெரிந்ததால் நயன் ஃபேன்ஸ் ரொம்ப அப்செட் ஆனாங்க. இந்நிலையில் தற்போது இரண்டாம் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் முழுக்க முழுக்க அம்மனாகவே மாறி ரசிகர்களுக்கு தரிசனம் கொடுத்துள்ளார் நயன்தாரா. ஆனால் அந்த போஸ்டர் வெளியானதில் இருந்தே நெட்டிசன்களின் சேட்டை ஆரம்பித்துவிட்டது. 

அந்த போஸ்டரில் நயன்தாரா அணிந்திருக்கும் மூக்குத்தியின் நிழல் மீசை போல் தெரிவதால், மீசை வைத்த அம்மன் என நயனை ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர். அதுமட்டுமின்றி அம்மன் ஹேர் கலரிங் எல்லாம் பண்ணி, கர்லிங் ஹேர் ஸ்டைலோட நின்னுட்டு இருக்குன்னு பங்கமாக கலாய்த்து வருகின்றனர். 

சில சேட்டைக்கார நெட்டிசன்களோ அம்மனை சைட் அடிச்சா தப்பு இல்லையா?... தெய்வ குத்தமாகிடாதா? என கேள்வி எழுப்பியுள்ளனர். சிலரோ அம்மனுக்கு சோறு போடுங்க, ரொம்ப சோர்வா இருக்கும்னு, ஏன் அம்மன் ரொம்ப சோகமா? இருக்குன்னு கேட்டிருக்காங்க. 

இதையும் படிங்க: சாமியாரிடமிருந்து எஸ்கேப் ஆன நயன்தாரா... எவ்வளவு மிரட்டியும் மசியவே இல்லையாமே..?

எங்களுக்கு அம்மன் என்றாலே ரம்யா கிருஷ்ணன் தான். நயன்தாராவை பார்த்தால் அம்மன் ஃபீலிங் வரல. என்னதான் வேஷம் போட்டாலும் மீனா, ரோஜாகிட்ட கூட வரமுடியாது. நயன்தாரா இந்த கேரக்டருக்கு எல்லாம் சரிப்பட்டு வரமாட்டார்.