பொங்கலுக்கு வெளியாகும் ‘விஸ்வாசம்’ படத்தின் பிரிவியூ ஷோவுக்கு மூன்று முறை அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், அத்தனை அழைப்புகளையும் நிராகரித்திருக்கிறார் அப்படத்தின் நாயகி ‘பேரழகி’ நயன்தாரா.

புத்தாண்டுக்கு முன் தினம் காதலருடன் நயன்  அமெரிக்க சுற்றுலா செல்லும் விபரம் தெரிந்த நிலையில் இயக்குநர் சிவா மூலம் அவருக்கு பிரிவியூக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாம். பயண ஏற்பாடிகளில் பிசியாக இருந்த அவர் ‘அப்புறம் பாத்துக்கலாம்’ என்று கூலாக தள்ளிப்போட்டாராம்.

அடுத்து புத்தாண்டு அன்று அஜீத் தனது மனைவி ஷாலினியுடன் படம் பார்த்து முடித்த நிலையில், அவரது வேண்டுகோளின்படி நயனுக்குப் படத்தைப் போட்டுக்காட்ட தயாரிப்பாளர் தரப்பு முயன்றபோது, தான் சென்னை திரும்பும் தேதியை இதுவரை முடிவு செய்யவில்லை என்றும் சென்னை வந்த பிறகும் கூட தான் பிரிவியூவில் பார்க்க விரும்பவில்லை என்றும் மக்களோடு மக்களாக தியேட்டரில் சென்று பார்க்கவிரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

தலைப்பில் கருப்பு வெள்ளையில் இருக்கும் நயனைப் பார்த்து விஸ்வாசத்தில் வில்லி கெட்டப் எதிலும் வருகிறாரா என்று கன்ஃபியூஸ் ஆகவேண்டாம். அது நயனின் அடுத்த த்ரில்லரான ‘ஐரா’ படத்தின் லுக்.