பாரபட்சமின்றி அனைவரது வாழ்க்கையிலும் விளையாட்டு காட்டும் கொரோனா, திரைப்பிரபலங்களையும் சும்மா விடவில்லை. ஷூட்டிங் இல்லாமல் வீட்டில் இருக்கும் இந்த நேரத்திலும் எக்கச்சக்கமான நடிகர், நடிகைகளுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. இதனால் திரைத்துறையினரும், ரசிகர்களும் மிகுந்த மன வேதனையில் உள்ளனர். 

பாலிவுட் திரையுலகின் சூப்பர் ஸ்டாரான அமிதாப் பச்சன் மற்றும் அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் பச்சன், பேத்தி ஆராத்யா ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது இந்தியா ரசிகர்களை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியது. ஓட்டுமொத்த திரையுலகினர் மற்றும் ரசிகர்களின் பிரார்த்தனைக்கு கிடைத்த பலனாக அனைவரும் தொற்றிலிருந்து நல்ல படியாக மீண்டனர். கடந்த ஒரு மாதமாக கொரோனா தொற்றுடன் போராடி வரும் பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல் நிலை தற்போது முன்னேற்றமடைந்து வருகிறது. இதனால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். 

 

இதையும் படிங்க: ஜி.வி.பிரகாஷ் - சைந்தவியின் குட்டி தேவதை ‘அன்வி’... அசத்தலான க்யூட் போட்டோஸ் இதோ...!!

இந்நிலையில் தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது திரையுலகினரை மீண்டும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. கோலிவுட்டின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் நிறுவன தயாரிப்பாளர் ஐசரி கணேஷனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் இவர் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியான தேவி, போகன், எல்கேஜி, கோமாளி உள்ளிட்ட படங்கள் விமர்சனம் மற்றும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றன. பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர்- கமல் ஹாசன் இணைந்துள்ள இந்தியன் 2 படத்திலும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

 

இதையும் படிங்க:  இன்று சிவகார்த்திகேயன் வீட்டில் விசேஷமான நாளாம்... நீங்கள் பார்த்திடாத புகைப்படங்களுடன் அசத்தல் தகவல்கள் !

நயன்தாரா முதன் முறையாக அம்மனாக நடித்துள்ள மூக்குத்தி அம்மன் திரைப்படத்தை இவர் தான் தயாரித்துள்ளார். அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில், மூக்குத்தி அம்மன் திரைப்படம் ரிலீசுக்கு தயாராக இருப்பது குறிப்பிடத்தக்கது. ஐசரி கணேஷனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் விரைவில் பூரண நலம் பெற வேண்டுமென திரையுலகினர் வாழ்த்து கூறி வருகின்றனர்.