Asianet News TamilAsianet News Tamil

சர்வதேச விருதுகளை வென்று குவித்த நயன்தாராவின் ‘கூழாங்கல்’ படம் நேரடியாக ஓடிடியில் ரிலீசாகிறது- எப்போ தெரியுமா?

நயன்தாராவின் ரெளடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து உலகளவில் பல்வேறு சர்வதேச விருதுகளை வென்ற கூழாங்கல் திரைப்படம் நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் ஆக உள்ளது.

Nayanthara produced Koozhangal movie Direct OTT release date announced gan
Author
First Published Oct 22, 2023, 4:01 PM IST | Last Updated Oct 22, 2023, 4:05 PM IST

தென்னிந்திய திரையுலகில் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வரும் நயன்தாரா, நடிப்பதை தாண்டி தனியாக தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் தனது காதல் கணவர் விக்னேஷ் சிவன் உடன் இணைந்து நடத்தி வருகிறார். ரெளடி பிக்சர்ஸ் என பெயரிடப்பட்டுள்ள அந்நிறுவனம் தொடர்ந்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தயாரித்து வருகிறது.

அந்த வகையில் ரெளடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த கூழாங்கல் படத்தை யாராலும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது. பி.எஸ்.வினோத் ராஜ் என்பவர் இயக்கிய இப்படம் சர்வதேச பட விழாக்களில் திரையிடப்பட்டு பல்வேறு விருதுகளையும் வென்றுள்ளது. குறிப்பாக உலகப்புகழ் பெற்ற ரோட்டர்டாம் விருது விழாவில் விருது வென்ற முதல் தமிழ்படம் என்கிற பெருமையையும் இப்படம் படைத்துள்ளது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Nayanthara produced Koozhangal movie Direct OTT release date announced gan

கடந்த இரண்டு ஆண்டுகளாக ரிலீஸ் ஆகாமல் இருந்த இப்படம் தற்போது ஒரு வழியாக வெளியீட்டுக்கு தயாராகி உள்ளது. கூழாங்கல் திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படம் வருகிற அக்டோபர் 27-ந் தேதி சோனி லிவ் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகும் என்று படக்குழுவே அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.

கூழாங்கல் திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா தான் இசையமைத்து உள்ளார். இப்படத்தை இயக்கிய இயக்குனர் பி.எஸ்.வினோத்ராஜ், தற்போது அடுத்த படத்தையும் இயக்கி முடித்துள்ளார். கொட்டுக்காளி என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளார். இப்படத்தில் நடிகர் சூரி கதையின் நாயகனாக நடித்துள்ளார். இப்படமும் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது.

இதையும் படியுங்கள்... பர்த்டே பார்ட்டி வைத்த பியூட்டி... 46-வது பிறந்தநாளை கோலிவுட் பிரெண்ட்ஸ் உடன் கொண்டாடிய சங்கீதா - போட்டோஸ் இதோ

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios