Asianet News TamilAsianet News Tamil

Nayanthara New Movie: நயன்தாராவின் பிறந்தநாளில் வெளியான சூப்பர் தகவல்..! செம்ம குஷியில் ரசிகர்கள்..!

நடிகை நயன்தாராவின் பிறந்தநாளை (Nayanthara Birthday) முன்னிட்டு அவர் அடுத்ததாக (nayanthara new movie) நடிக்க உள்ள படம் குறித்த சூப்பர் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

nayanthara new movie officially announced on his birthday
Author
Chennai, First Published Nov 18, 2021, 12:55 PM IST

நடிகை நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் அடுத்ததாக நடிக்க உள்ள படம் குறித்த சூப்பர் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

கோலிவுட் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, இன்று தனது 37 ஆவது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், அவருக்கு சிறப்பு காமென் டிபி வெளியிட்டு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் தொடர்ந்து தங்களது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

nayanthara new movie officially announced on his birthday

மேலும், நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவன் இவரது பிறந்தநாளை மிக பிரமாண்டமாக கொண்டாடிய வீடியோக்கள் நேற்று இரவு முதலே செம்ம வைரலாகி வருகிறது. இந்நிலையில் நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் அடுத்ததாக நடிக்க உள்ள, புதிய படம் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

 நயன்தாராவின் புதிய படத்தை அவருடைய ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது அனுபம்கெர், நயன்தாரா மற்றும் சத்யராஜ் ஆகியோரது நடிப்பில் உருவாகி வரும் இந்த படத்தை அஸ்வின் சரவணன் என்பவர் இயக்கவுள்ளார். இவர் ஏற்கனவே நயன்தாரா நடித்த ‘மாயா’ படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு மிகவும் வித்தியாசமாக ‘கனெக்ட்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டு அறிவித்துள்ளது படக்குழு.

nayanthara new movie officially announced on his birthday

இந்த போஸ்டரை பார்க்கும் போதே... இது திகில் படமா? என்கிற எண்ணம் வருகிறது. நயன்தாரா ஏற்கனவே ’காத்துவாக்குல ரெண்டு காதல்’, ‘கோல்டு’, ’காட்ஃபாதர்’ ‘லயன்’ உட்பட ஒரு சில படங்களில் நடித்து வரும் நிலையில் அந்த லிஸ்டில் 'கன்னெக்ட்' திரைப்படமும் இணைந்துள்ளது.

 

Follow Us:
Download App:
  • android
  • ios