தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவிற்கு கேரியர் பிரேக்காக அமைந்த படங்களில் முக்கிய இடம் பிடித்தது கோலமாவு கோகிலா. 2018ம் ஆண்டு வெளியான இந்த படத்தில் நயன்தாரா, யோகிபாபு, ஜாக்குலின், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். நெல்சன் இயக்கத்தில் வெளியான இந்த படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் ஹீரோயின் கதாபாத்திரத்தில் நடித்திருந்த நயனை விரட்டி, விரட்டி காதலிக்கும் சூப்பர் பாயாக அந்தர் செய்திருந்தார் யோகிபாபு. 

இந்த படத்தை ஏற்கனவே கன்னடத்தில் ரீமேக் செய்யும் வேலைகள் நடைபெற்று வருகின்றன. ரேடியோ ஜாக்கியாக இருந்த மயூரா ராகவேந்திரா என்பவர் படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தில் சீரியல் நடிகையான ரக்சிதா ராம், நயன்தாரா கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் தற்போது கோலமாவு கோகிலா படத்தை இந்தியில் ரீமேக் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

 

இதையும் படிங்க: பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனாவா இது?... நிறைமாத வயிறுடன் நடத்திய அசத்தல் போட்டோ ஷூட்...!

இயக்குநர் ஆனந்த் எல் ராய் தயாரிப்பில் பாலிவுட்டில் அந்த படம் வெகு விரைவாக ரீமேக் ஆக உள்ளது. கன்னடத்தில் ரட்சிதா ராம் நயன்தாரா ரோலில் நடிக்க உள்ள நிலையில், பாலிவுட்டில் கோகிலா கதாபாத்திரத்தில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் தான் நடிக்கப் போகிறார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.