நயன்தாராவின் 'அன்னபூரணி' திரைப்படம் நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் இருந்து நீக்கம்!

லவ் ஜிகாத் சர்ச்சையில் சிக்கிய நடிகை நயன்தாராவின் அன்னபூரணி திரைப்படம், தற்காலிகமாக netflix ott தளத்தில் இருந்துநீக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 

nayanthara 75th film Annapoorani movie deleted in netflix ott

தமிழில் தொடர்ந்து வித்யாசமான கதைக்களத்தை மையமாக வைத்து எடுக்கப்படும் திரைப்படங்களில் நடிப்பதை வழக்கமாக வைத்திருக்கும் நடிகை நயன்தாரா, தன்னுடைய 75 ஆவது படமாக நடித்துள்ள திரைப்படம் 'அன்னபூரணி'. கடந்த மாதம் டிசம்பர் 1-ஆம் தேதி ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றாலும், முதல் நாளே 5 கோடி வசூலை அள்ளியது.

மேலும் சென்னை உள்ளிட்ட புறநகர் பகுதிகளை புரட்டிப்போட்ட மிக்சாம் புயல் தாக்கத்தாலும், மழை வெள்ளத்தால் வெளியான ஒரே வாரத்தில் வாஷ் அவுட் ஆன அன்னபூரணி திரைப்படம், கடந்த வாரம் நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. சமையல் கலையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்த இந்த படத்தை இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கி இருந்தார். நயன்தாராவுக்கு ஜோடியாக ஜெய் நடிக்க, பூர்ணிமா ரவி, ரெடிங்ஸ் கிங்ஸ்லி, சத்யராஜ், கார்த்திக், உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

Periods டைம்ல என் பொண்டாடி நயன் டெரர்ரா இருப்பாங்க! நாப்கின் நிறுவனத்தின் பின்னணி பற்றி கூறிய விக்னேஷ் சிவன்!

nayanthara 75th film Annapoorani movie deleted in netflix ott

மேலும் இப்படம் திரையரங்குகளில் வெளியான போதே, மத உணர்வுகளை புண்படுத்துவதாக சர்ச்சை எழுந்த நிலையில், லவ் ஜிகாத்தை விளம்பரப்படுத்தும் நோக்கில் இப்படத்தின் காட்சிகள் இடம் பெற்றதாக மும்பை போலீசில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதைத்தொடர் அன்னபூரணி திரைப்படம் netflix ott தளத்தில் இருந்து தற்போது தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது. சர்ச்சை கூறிய காட்சிகள் நீக்கும் வரை அன்னபூரணி திரைப்படம் netflix தளத்தில் இடம்பெறாத என நிர்வாகம் அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளது. இந்த சம்பவம் திரையுலகினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

எதிர்பாராததை எதிர்பாருங்கள்... பிக்பாஸில் மீண்டும் ஒரு Mid Week Eviction - அவுட் ஆகப்போகும் அடுத்த நபர் இவரா?
 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios