கர்நாடக மாநிலம், பெங்களூரைச் சேர்ந்த பிரபலமான கட்டுமான நிறுவனம் ஒன்றின் மோசடியால் நடிகை நயன்தாரா, ரம்யா கிருஷ்ணன், அஞ்சலி முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் தெண்டுல்கர் உள்ளிட்ட பல விஐபிக்கள் கோடிக்கணக்கில் ஏமாந்த தகவல் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.

பெங்களூரைச் சேர்ந்த முன்னணி நில விற்பனை நிறுவனம் ஒன்று நீர் ஆதாரம் உள்ள புறம்போக்கு நிலத்தை நயன்தாரா, ரம்யா கிருஷ்ணன், அஞ்சலி டெண்டுல்கர் உள்ளிட்ட பல கிரிக்கெட் மற்றும் சினிமா பிரபலங்களுக்கு விற்பனை செய்துள்ளதாக தெரிகிறது. விவசாயிகளிடமிருந்து புறம்போக்கு நிலங்களை ஏக்கர் ஒன்றுக்கு வெறும் ஒரு லட்ச ரூபாய்க்கு மட்டுமே வாங்கிய இந்த நிறுவனம், அந்த நிலத்தை ஏக்கர் ஒன்றுக்கு ஒரு கோடி ரூபாய்க்கு பல பிரபலங்களிடம் விற்பனை செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் நடிகை நயன்தாரா, ரம்யா கிருஷ்ணன், அஞ்சலி தெண்டுல்கர் உள்ளிட்டோர் கோடிக்கணக்கான ரூபாய்க்கு ஏக்கர் கணக்கில் இந்த நிலத்தை வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது இந்த நிலத்தில் கட்டுமானங்கள் கட்ட முடியாது என்றும் அவை நீர்நிலை புறம்போக்கு என்றும் தெரிய வந்துள்ளதால் இது குறித்து வருவாய்த் துறை அதிகாரிகள் விசாரணை செய்து அந்த குறிப்பிட்ட கட்டுமான நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். இந்த விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் அந்த கட்டுமான நிறுவனத்தில் உள்ள பங்குதாரர்கள் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் உண்மைகள் ஒவ்வொன்றாக வெளியே வந்து கொண்டிருப்பதாகவும் கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நடிகர், நடிகைகள், கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்ட பிரபலங்கள் இது குறித்து வெளியே பேசாமல் இருந்து வருகின்றனர்.