"ஹாப்பி பர்த்டே சார்".. தனது ஸ்டைலில் SJ சூர்யாவுக்கு வாழ்த்து சொன்ன "Natural Star" - வைரல் வீடியோ!
SJ Suryah : பிரபல நடிகர் மற்றும் இயக்குனர் எஸ் ஜே சூர்யா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகின்றார், அவருக்கு வயது 56.
ஜஸ்டின் செல்வராஜ் பாண்டியன் என்ற இயற்பெயரோடு, கடந்த 1968ம் ஆண்டு திருநெல்வேலியில் பிறந்தவர் தான் எஸ்.ஜே சூர்யா. திரைத்துறை மீது கொண்ட ஆசையின் காரணமாக சொந்த ஊரிலிருந்து சென்னைக்கு குடிபெயர்ந்து, பிரபல லயோலா கல்லூரியில் தனது பட்டப் படிப்பை முடித்த அவர், பிரபல இயக்குனர் பாக்கியராஜின் திரைப்படங்களில் உதவி இயக்குனராக பணியாற்ற துவங்கினார்.
அதன் பிறகு பாரதிராஜா இயக்கத்தில் வெளியான "கிழக்கு சீமையிலே" என்கின்ற திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரம் ஏற்று இவர் நடித்திருந்தார். தொடர்ச்சியாக பல திரைப்படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்த எஸ்.ஜே சூர்யா, நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவான "ஆசை" என்கின்ற திரைப்படத்திலும் பணியாற்றியுள்ளார்.
அப்பொழுது நடிகர் அஜித்குமாரின் நட்பு இவருக்கு கிடைக்க, அதன் மூலம் 1999ம் ஆண்டு தமிழில் வெளியான "வாலி" என்கின்ற திரைப்படத்தின் மூலம் இவர் இயக்குனராக களமிரங்கினார். இந்த 25 ஆண்டு கால திரை பயணத்தில் வெறும் ஐந்து திரைப்படங்களை தான் இவர் இயக்கியிருக்கிறார் என்றாலும் கூட, நடிகராக தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று ஒரு பான் இந்திய நடிகராக வலம்வந்து கொண்டிருக்கிறார்.
இன்று அவர் தனது 56வது பிறந்தநாளை கொண்டாடிவரும் நிலையில், கோலிவுட் மற்றும் டோலிவுட் என்று இரு திரையுலகங்களும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றன. குறிப்பாக தனுஷின் ராயன் படக்குழு, சிறப்பாக ஒரு போஸ்டரை வெளியிட்டு, சூர்யாவிற்கு தங்களது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இதுஒருபுரம் இருக்க, டோலிவுட் உலகின் பிரபல நடிகர் Natural Star நானியுடன், இப்பொது SJ சூர்யா "Saripodhaa Sanivaaram" என்ற படத்தில் நடித்து வருகின்றார். இந்நிலையில் அந்த பட கெட்டப்பில் வந்து, சூர்யாவுக்கு வாழ்த்து கூறியுள்ளார் நானி, இப்பொது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
ராஜமௌலி உடன் இணையும் ரவி தேஜா.. அப்போ மகேஷ் பாபு நிலைமை? படம் எப்போ ரிலீஸ் தெரியுமா?