யாஷ் முதல் நித்யா மேனன் வரை.. தேசிய விருது வென்றவர்களுக்கு பரிசு தொகை எவ்வளவு தெரியுமா?
National Award Winners : தென்னிந்திய நடிகர்கள் பலருக்கு இந்த முறை தேசிய விருது கிடைத்துள்ளது அவர்களது ரசிகர்களுக்கு பெரிய சந்தோஷத்தை கொடுத்துள்ளது.
அண்மையில் 70வது தேசிய விருது வழங்கும் விழா வெகு விமர்சையாக நடைபெற்று முடிந்தது. இதில் ஆறு தேசிய விருதுகளை தமிழ் சினிமா கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. அதேபோல கன்னட மொழி திரைப்படங்கள் பலவும், தேசிய விருது வென்று அசத்தியுள்ளது. இந்திய அரசு 70வது தேசிய விருது பெறுபவர்களுடைய பட்டியலை அண்மையில் அறிவித்தது.
அதன்படி தனுஷின் திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் நடித்த பிரபல நடிகை நித்யா மேனனுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்துள்ளது. அதேபோல மணிரத்தினம் இயக்கி வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகத்திற்கு 6 தேசிய விருதுகள் கிடைத்துள்ளது அப்படக்குழுவினரை மகிழ்ச்சி கடலில் மூழ்கடித்துள்ளது.
"என்ன யாராலும் தடுக்க முடியாது" புதிய லீடராக வரும் தளபதி விஜய் - சர வெடியாக வெடிக்கும் GOAT ட்ரைலர்!
இதன் மூலம் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் தனது ஏழாவது தேசிய விருதை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இது ஒருபுறம் இருக்க, "காந்தாரா" திரைப்படத்தின் மூலம் மக்களை அசரடித்த இயக்குனர் மற்றும் நடிகர் ரிஷப் செட்டிக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்த நிலையில், யாஷ் நடிப்பில் தூள் கிளப்பிய கேஜிஎப் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கு சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது.
இந்த முறை அதிக அளவிலான தேசிய விருதுகளை தென்னிந்திய திரைப்படங்கள் பெற்றுள்ள நிலையில் தற்போது அந்த விருது வென்றவர்களுக்கு கொடுக்கப்படும் பரிசு தொகை குறித்த தகவலும் வெளியாகி உள்ளது. அதன்படி சிறந்த திரைப்படம் என்கின்ற வரிசையில் வெற்றி பெற்ற திரைப்படங்களுக்கு 2.5 முதல் 3 லட்சம் ரூபாய் பரிசு தொகையாக வழங்கப்படுகிறது.
அதே நேரம் சிறந்த நடிகர் மற்றும் சிறந்த துணை நடிகை மற்றும் நடிகர்களுக்கு 2 லட்சம் ரூபாயும், சிறந்த நடிகையாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு 2.5 லட்சம் ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. இந்த முறை சிறந்த நடிகைக்கான தேசிய விருது நித்திய மேனன் மற்றும் குஜராத்தி நடிகை மானசி என்று இருவருக்கு அளிக்கப்படுகிறது.
மணிரத்னம் படத்துக்கே நோ சொன்ன மைக் மோகன்.. அப்படி என்ன பிரச்சனை? எந்த படம் தெரியுமா?