ரவுடிகளுடன் வீடு புகுந்து தாக்குதல்... சூர்யா தேவி மீது நாஞ்சில் விஜயன் போலீசில் புகார்...!
அப்போது சிலர் அடியாட்களுடன் வீட்டிற்குள் நுழைந்த சூர்யா தேவி அங்கு இருந்தவர்களை சரமாரியாக தாக்கி விட்டு சென்றுள்ளார்.
பிரபல முன்னணி தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில், காமெடி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர் நாஞ்சில் விஜயன். இவர் சொந்தமாக யுடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். தன்னுடைய வீட்டிலேயே செட் அமைத்து சேனலுக்கு தேவையான படப்பிடிப்புகளை நடத்தி வருகிறார் நாஞ்சில் விஜயன். இந்நிலையில் இவர் நேற்று இரவு வளசரவாக்கம், வீரப்பா நகரில் உள்ள தன்னுடைய வீட்டில் சின்னத்திரை நடிகை சீபாவுடன் சேர்ந்து யூ டியூப் நிகழ்ச்சிக்காக படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்தார்.
இதையும் படிங்க: இரவில் யாஷிகாவை தவிக்கவிட்டு தப்பியோடிய பாலாஜி முருகதாஸ்... கிழியும் பிக்பாஸ் பிரபலத்தின் முகமூடி..!
அப்போது சிலர் அடியாட்களுடன் வீட்டிற்குள் நுழைந்த சூர்யா தேவி அங்கு இருந்தவர்களை சரமாரியாக தாக்கி விட்டு சென்றுள்ளார்.இதில் நாஞ்சில் விஜயனுக்கு, சின்னத்திரை நடிகை சீபாவிற்கும் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன. தற்போது காயமடைந்தவர்கள் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாரகள்.
இதையும் படிங்க: தனுஷுக்கு ‘நோ’சொன்ன சாய்பல்லவி... சூப்பர் டூப்பர் ஹிட் படத்தில் தவறவிட்ட வாய்ப்பு...!
நடிகை வனிதா - பீட்டர் பால் திருமண விவகாரத்தில் சூர்யா தேவி வரம்பு மீறி விமர்சித்து வந்தார். இதையடுத்து வனிதா கொடுத்த புகாரின் அடிப்படையில் சூர்யாதேவி நள்ளிரவில் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் வெளியே வந்தார். இந்த விவகாரத்திற்கு பிறகு சூர்யா தேவிக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த நாஞ்சில் விஜயன் வனிதாவிடம் மன்னிப்பு கேட்டு சமாதானம் ஆனார். இந்நிலையில் வனிதாவிற்கு ஆதரவாக இருந்ததாக கூறி சூர்யா தேவி தன் மீது தாக்குதல் நடத்தியதாக நாஞ்சில் விஜயன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து நாஞ்சில் விஜயன் வளசரவாக்கம் போலீசில் கொடுத்துள்ள புகார் மீது விசாரணை நடைபெற்று வருகிறது.