நடிகர் நானி-யின் 31-ஆவது படத்தின், டைட்டில் மற்றும் Unchained வீடியோ வெளியாகி படம் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. 

'தசரா' படத்தின் மூலம் பான் இந்தியா அளவில் புகழடைந்து, 'ஹாய் நான்னா' எனும் திரைப்படத்தின் வெளியீட்டிற்காக காத்திருக்கும் 'நேச்சுரல் ஸ்டார்' நானி அடுத்ததாக 'அந்தே சுந்தரனிகி' போன்ற கல்ட் பொழுதுபோக்கு படைப்பை வழங்கிய திறமையான இயக்குநர் விவேக் ஆத்ரேயா உடன் இணைகிறார். ஆஸ்கார் விருதை வென்ற 'ஆர் ஆர் ஆர்' எனும் திரைப்படத்திற்கு பிறகு, ''சூர்யாவின் சனிக்கிழமை'' படத்தை டி வி வி என்டர்டெய்ன்மெண்ட்ஸ் சார்பில் டி வி வி தனய்யா மற்றும் கல்யாண் தாசரி ஆகியோரால் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கப்படுகிறது.

அண்மையில் ஒரு சிறிய வீடியோ உடன் இந்த படைப்பு குறித்து அறிவித்த தயாரிப்பாளர்கள், கட்டவிழ்க்கப்பட்ட- Unchained எனும் மற்றொரு புதிரான வீடியோ மூலம் இதன் தலைப்பை வெளியிட்டுள்ளனர். ஒவ்வொரு வாரமும் ஒரு நாளில் கட்டுப்படுத்த முடியாத கதாநாயகனின் அரிய மற்றும் தனித்துவமான தரத்தை விவரிக்கும் சாய் குமாரின் பின்னணி குரலில் அதிரடி நிரம்பிய அன்செயின்ட்- Unchained தொடங்குகிறது. சனிக்கிழமை அந்த விசேட நாள். இறுதியாக 'சூர்யாவின் சனிக்கிழமை' என தலைப்பு வெளியிடப்படுகிறது. இந்த டைட்டில் அசாதாரணமானதாகவும், சக்தி வாய்ந்ததாகவும் இருக்கிறது. 

Ramya Pandian: நவராத்திரி ஸ்பெஷல்.. தாமரை மேல் அமர்ந்திருக்கும் துர்கா தேவியாக காட்சியளிக்கும் ரம்யா பாண்டியன்

முற்றிலும் தனித்துவமான கருத்துக்களை முயற்சிக்கும் இயக்குநர் விவேக் ஆத்ரேயாவிடமிருந்து இது நிச்சயமாக எதிர்பார்க்கப்படும் ஒரு வித்தியாசமான படைப்பாக இருக்கும் என தெரிகிறது. மேலும் இந்த திரைப்படம் நானி முன் எப்போதும் இல்லாத ஒரு புதிய அவதாரத்தில் காண்பிக்கும் என்று இந்த அன்செயின்ட் - Unchained வீடியோ உறுதியளிக்கிறது. உண்மையில் நானிக்கு இங்கு ஒரு வீரம் மிகுந்த அறிமுகம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் அவர் வெற்றி பெற்று வெளியே வரும்போது மக்களின் முகத்தில் புன்னகை இருக்கும். இறுதி அத்தியாயம் கதாபாத்திரத்திற்கு போதுமான உயர்வை கொண்டு வருகிறது. 

வித்தியாசமான சப்ஜெக்டுகளில் முயற்சி செய்து கதாபாத்திரங்களின் தேவைக்கேற்ப தன்னை மாற்றிக் கொள்ளும் நடிகர் நானி முரட்டுத்தனமான தோற்றத்தில் ஆச்சரியப்படுத்துகிறார். இவை அனைத்தும் நம்பிக்கைக்குரியதாக தெரிகிறது. டைட்டிலுக்கான பிரத்யேக வீடியோவில் நானியின் தோற்றம் வேற லெவல்

Karthika Nair Engagement Photos: மகள் கார்த்திகாவின் நிச்சயதார்த்த புகைப்படத்தை வெளியிட்ட நடிகை ராதா!

'நேச்சுரல் ஸ்டார்' நானி நடிக்கும் 'சூர்யாவின் சனிக்கிழமை' திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்கிறார். இவருடன் எஸ். ஜே. சூர்யா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ஜி. முரளி ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைக்கிறார். படத்தொகுப்பு பணிகளை கார்த்திக் ஸ்ரீநிவாஸ் கவனிக்கிறார். 'சூர்யாவின் சனிக்கிழமை' பான் இந்திய திரைப்படமாகும். இது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது. இப்படத்தில் பணியாற்றும் இணை நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் குறித்த அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு நாளை முதல் துவங்க உள்ளது.‌

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

#Nani31 Unchained - Saripodhaa Sanivaaram | Nani | Priyanka Mohan | Vivek Athreya | DVV Danayya