பிரதமர் மோடிக்காக மச்சான்ஸ் நமீதா செய்த செயல்..!
தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகை நமிதா. இவர் முன்னணி நடிகையாக இருக்கும்போதே திருச்சியில் மறைந்து முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில் அதிமுகவில் கட்சியில் தன்னை அடிப்படை உறுப்பினராக இணைத்துக் கொண்டார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகை நமிதா. இவர் முன்னணி நடிகையாக இருக்கும்போதே திருச்சியில் மறைந்து முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில் அதிமுகவில் கட்சியில் தன்னை அடிப்படை உறுப்பினராக இணைத்துக் கொண்டார்.
இதைத் தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க அவருக்கு வாய்ப்பு குறைந்து போன பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று புகழ் பெற்றார். இதையடுத்து தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு மீண்டும் திரைப்பட வாய்ப்புகள் வந்தால் அதில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.
இந்நிலையில் கடந்த ஆண்டு, நமீதா அதிமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். பா.ஜ.க. செயல் தலைவர் ஜே.பி.நட்டா சென்னை வந்தபோது, தன்னை பாஜக கட்சியில் இணைத்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது மச்சான்ஸ் நமீதா, நாடு முழுவதும் உலக மக்களை அச்சுறுத்தி வரும், கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை தடுக்கும் பொருட்டு, மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கும், மோடி எடுத்த மற்ற நடவடிக்கைகளுக்கும், நன்றி கூறும் விதமாக பாடல் ஒன்றை உருவாக்கியுள்ளார்.
’மோடி, நரேந்திர மோடி’ என்ற தொடங்கும் இந்த பாடலில் பிரதமர் மோடியின் அரசு கொரோனா வைரஸுக்கு எதிரான எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்தும் பாகிஸ்தானுக்கு எதிராக எடுத்த சர்ஜிக்கல் ஸ்டிரைக் குறித்தும், இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் பாகிஸ்தான் சிக்கியபோது அவரை மீட்டு வந்தது குறித்தும் கூறப்பட்டுள்ளது. தெலுங்கில் உருவாகி உள்ள இந்த பாடலை, ராமகிருஷ்ணன் என்பவர் எழுதி உள்ளார். எஸ்கே பாலசந்திரன் பாடியும் உள்ளார்.
நமீதா உருவாக்கியுள்ள இந்த பாடல் பாஜகவினர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் பலர் வைரலாக பார்த்து வருகிறார்கள்.