Nakkhul retaliator post : தனது மனைவியை திருநங்கை என விமர்சித்த நபரை 'நீ வாழ்க்கையில் எதுவும் இல்லாமல் கஷ்டப்படுவாய்' என நடிகர் நகுல்  விமரிசித்துள்ளார்.

“பாய்ஸ்”,“காதலில் விழுந்தேன்” “தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்”,“மாசிலாமணி”, “நான் ராஜவாகப் போகிறேன்”, “வல்லினம்” ஆகிய படங்களில் நடித்தவர் நகுல். பிரபல நடிகை தேவயானியின் தம்பியான இவர், நடிப்பின் மீது கொண்ட ஆர்வம் காரணமாக தன்னுடைய உடல் எடையை பாதியாக குறைத்து, கதாநாயகனாக அறிமுகமானார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இவர் கடந்த 2016ம் ஆண்டு தனது நீண்ட நாள் காதலியான ஸ்ருதி என்பவரை திருமணம் செய்துகொண்டார். மேலும் தனது 35-வது பிறந்தநாளன்று தன் மனைவி கர்ப்பமாக இருக்கிறார் என தன் சமூக வலைதள பக்கத்தில் அறிவித்தார். பின்னர் நகுல் - ஸ்ருதி தம்பதினருக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் 2ம் தேதி அழகிய பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு அகிரா என்று பெயர் வைத்துள்ளனர்.

இந்த ஜோடி குழந்தைக்கு தாய் பால் கொடுப்பது போன்ற புகைப்படத்தையும் பதிவிட்டு தாய் பால் குறித்து விழிப்புணர்வு பதிவு செய்திருந்தனர்.

இதற்கிடையே நகுல் தனது மனைவி மகளுடன் இருக்கும் புக்கியப்படத்தை பகிர்ந்து அழகிய தேவைதைகள் என குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவிற்கு கமெண்ட் செய்த ஒருவர் உங்கள் மனைவி திருநங்கை போல இருப்பதாக விமரிசித்தார். இதனால் கடுப்பான நகுல், படு கோவமாகா அவருக்கு பதில் கூறியுள்ளார்.