'நாகினி 3 ' சீரியல் ஹீரோ பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த 2013 ஆம் ஆண்டு Dil Ki Nazar Se Khoobsurat என்கிற சீரியல் மூலம் தன்னுடைய திரை பயணத்தை துவங்கியவர் பேர்ல் வி.பூரி. இந்த சீரியலை தொடர்ந்து இவர் பல சீரியல்களில் நடித்தாலும், இவரது தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் நன்கு அறிமுகப்படுத்தியது என்றால் 'நாகினி 3 ' சீரியல் தான். இதில் ஹீரோவாக நடித்து மிகவும் பிரபலமானார். இவர் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

நடிகர் பேர்ல் வி.பூரி, கடந்த 2019ம் ஆண்டு மும்பை அருகில் உள்ள வசாயில் என்கிற பகுதியில் டிவி நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். அப்போது அந்த படப்பிடிப்பில் கலந்து கொண்ட நடிகை ஒருவர் தன்னுடைய 5 வயது குழந்தையையும் படப்பிடிப்புக்கு கூட்டி வந்துள்ளார். ஷூட்டிங் ஸ்பாட்டில் சுற்றி சுற்றி அனைவரிடமும் விளையாடி கொண்டிருந்த அந்த குழந்தையை நடிகை பெரிதாக கண்டு கொள்ளவில்லை என கூறப்படுகிறது.

அந்த நேரத்தில் அந்த பிஞ்சு குழந்தையை விளையாட அழைத்து செல்வதாக, பேர்ல் வி பூரி தனியாக அழைத்து சென்று பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளார். சிறுமி இது குறித்து தனது தாயாரிடம் தெரிவித்ததாகவும், ஆனால் அதை அந்த நடிகை கண்டுகொள்ளவில்லை என கூறப்படுகிறது. இந்த குழந்தைக்கு மறு தினமே உடல்நல பிரச்சனைகள் ஏற்படவே, குழந்தையின் தந்தை மருத்துவமனைக்கு அழைத்து சென்று சோதனை செய்த போது, பாலியல் தொல்லைக்கு ஆளான விவரம் தெரிய வந்தது.

பின்னர் இதுகுறித்து நடிகையின் கணவரான, சிறுமியின் தந்தை மும்பை போலீசில் புகார் கொடுத்தார். மும்பை வர்சோவா போலீஸார் இது குறித்து வழக்குப்பதிவு செய்தபின், சம்பவம் வசாய் பகுதியில் நடந்திருப்பதால் வழக்கை அங்குள்ள காவல் நிலையத்திற்கு மாற்றியுள்ளனர். இந்நிலையில் சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு பின் போலீசார் இந்த வழக்கு குறித்து, 5 வயது குழந்தையை பாலியல் தொல்லைக்கு ஆளாக்கிய அந்த நடிகரை கைது செய்துள்ளனர். 

நடிகர் தன்னுடைய மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் குறித்து தெரிய வந்தும், அது குறித்து போலீசாரிடம் தெரிவிக்காமல் இருந்த அந்த நடிகை மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்படுகிறது. பிரபல சீரியல் ஹீரோ பாலியல் வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட சம்பவம் பாலிவுட் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.