Video : எப்புட்ரா... கல்கி 2898AD படத்திற்காக உருவாக்கப்பட்ட ‘புஜ்ஜி கார்’ ஓட்டி பார்த்து மெர்சலான நாக சைதன்யா
பிரபாஸ் நடித்துள்ள கல்கி 2898AD படத்திற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள புஜ்ஜி என்கிற காரை நடிகர் நாக சைதன்யா ஓட்டிப்பார்த்துள்ளார்.
பிரபாஸின் கல்கி 2898AD
சலார் படத்தின் வெற்றிக்கு பின்னர் நடிகர் பிரபாஸ் ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் கல்கி 2898AD. இப்படத்தை நாக் அஸ்வின் இயக்கி உள்ளார். இவர் இதற்கு முன்னர் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியாகி தேசிய விருது வென்ற மகாநடி படத்தை இயக்கியவர் ஆவார். மகாநடி படத்தின் வெற்றிக்கு பின்னர் சுமார் 5 ஆண்டுகள் கடின உழைப்புக்கு பின்னர் அவர் கல்கி 2898AD படத்தை இயக்கி உள்ளார்.
கமல்ஹாசன் கேமியோ
கல்கி 2898AD திரைப்படத்தில் பிரபாஸ் ஹீரோவாக நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடித்துள்ள இப்படத்தில் அமிதாப் பச்சன், பசுபதி உள்பட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. மேலும் இதில் உலகநாயகன் கமல்ஹாசனும் கேமியோ ரோலில் நடித்திருக்கிறார். அவர் வில்லனாக நடித்துள்ளதாக கூறப்படுகிறது. கல்கி திரைப்படம் இரண்டு பாகங்களாக ரிலீஸ் ஆக உள்ளதாம்.
ஜூன் மாதம் ரிலீஸ்
அதில் கமல்ஹாசன் இடம்பெறும் காட்சிகள் முதல் பாகத்தில் 20 நிமிடமும், இரண்டாம் பாகத்தில் 90 நிமிடமும் இடம்பெறும் என கூறப்படுகிறது. கல்கி திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து உள்ளார். இப்படம் வருகிற ஜூன் மாதம் திரைக்கு வர உள்ளது. இப்படத்தில் பிரபாஸ் உடன் புஜ்ஜி என்கிற காரும் ஒரு முக்கிய பங்காற்றி இருக்கிறது. அந்த காரின் ஸ்பெஷாலிட்டி என்னவென்றால் அது முழுக்க முழுக்க இப்படத்திற்காக உருவாக்கப்பட்டு உள்ளதாம்.
இதையும் படியுங்கள்... Kalki : கல்கி படத்திற்காக சென்னையில் உருவான புஜ்ஜி.. ஆனந்த் மஹிந்திரா ட்வீட் வைரல் - நன்றி சொன்ன இயக்குனர்!
புஜ்ஜி கார்
புஜ்ஜி என பெயரிடப்பட்டுள்ள அந்த காரை மஹிந்திரா நிறுவனம் தான் உருவாக்கி கொடுத்துள்ளது. அதிநவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய அந்த கார் தான் படத்தில் ஹைலைட்டாக இருக்கும் என கூறப்படுகிறது. தற்போது ரிலீஸுக்கு முன்பே அந்த கார், ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அண்மையில் நடைபெற்ற புரமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் பிரபாஸ் அந்த காரில் தான் மாஸ் எண்ட்ரி கொடுத்தார்.
ஷாக் ஆன நாக சைதன்யா
இந்த நிலையில், தற்போது தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் நாக சைதன்யா, அந்த காரை ஓட்டிப் பார்த்திருக்கிறார். அவர் ஓட்டிப்பார்த்தபோது எடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் காரை ஓட்டியதும் ஆச்சர்யத்தில் திளைத்த நாக சைதன்யா, தான் இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை என கூறி இருக்கிறார். மேலும் இன்ஜினியரிங்கின் அனைத்து விதிகளையும் தகர்த்து இந்த காரை உருவாக்கி இருக்கிறார்கள் என தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்... Jyothika Sister : ஜோதிகாவின் உடன்பிறந்த சகோதரியை பார்த்திருக்கிறீர்களா? அவரும் ஒரு நடிகை தான்! ஆனா நக்மா இல்லை