MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Jyothika Sister : ஜோதிகாவின் உடன்பிறந்த சகோதரியை பார்த்திருக்கிறீர்களா? அவரும் ஒரு நடிகை தான்! ஆனா நக்மா இல்லை

Jyothika Sister : ஜோதிகாவின் உடன்பிறந்த சகோதரியை பார்த்திருக்கிறீர்களா? அவரும் ஒரு நடிகை தான்! ஆனா நக்மா இல்லை

நடிகை ஜோதிகாவின் உடன்பிறந்த சகோதரி பற்றி பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை, அவர் தமிழ் படங்களிலும் நடித்திருக்கிறார் அவரைப் பற்றி பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : May 25 2024, 12:53 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Jyothika

Jyothika

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து பேமஸ் ஆனவர் ஜோதிகா. நடிகர் சூர்யாவின் மனைவியான இவர் தற்போது தயாரிப்பாளராகவும் ஜொலித்து வருகிறார். இவரும் சூர்யாவும் இணைந்து 2டி என்கிற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி அதன் மூலம் தரமான படங்களை தயாரித்தும் வருகின்றனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
26
Jyothika sister nagma

Jyothika sister nagma

சூர்யாவை காதலித்து திருமணம் செய்யும் முன்பு வரை ஜோதிகாவுக்கு சினிமாவில் அடையாளமாக இருந்தது அவர் நடிகை நக்மாவின் தங்கை என்பது தான். நக்மா உச்ச நடிகையாக வலம் வந்துகொண்டிருந்த சமயத்தில் தான் எஸ்.ஜே.சூர்யா இயக்கிய வாலி படத்தின் மூலம் கோலிவுட்டில் ஹீரோயினாக எண்ட்ரி கொடுத்தார் ஜோ.

36
Jyothika and Nagma

Jyothika and Nagma

90ஸ் பிற்பாதியில் ஜோதிகா, நக்மா இருவருமே கோலிவுட்டில் முன்னணி நடிகைகளாக வலம் வந்தனர். இவர்கள் இருவரும் சகோதரிகள் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் உடன் பிறந்த சகோதரிகள் இல்லை என்பது பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. நக்மாவின் ஒன்றுவிட்ட சகோதரி தான் ஜோதிகா.

இதையும் படியுங்கள்... Jyothika : சூர்யா வீட்ல ஒரு ரூல் இருக்கு... எவ்ளோ பிசியா இருந்தாலும் அதை பாலோ பண்ணனும் - ஜோதிகா சொன்ன சீக்ரெட்

46
Roshini, Jyothika, Nagma

Roshini, Jyothika, Nagma

அதேபோல் ஜோதிகாவுக்கு உடன்பிறந்த சகோதரி ஒருவரும் இருக்கிறார். அவரைப் பற்றி யாரும் பெரியளவில் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவர் பெயர் ரோஷினி, அவரும் பார்ப்பதற்கு ஜோதிகா போலவே இருப்பார். இதில் ஆச்சர்யம் என்னவென்றால் ரோஷினியும் தமிழ் படங்களில் நடித்திருக்கிறார்.

56
Jyothika Sister Roshini Acted Tamil Movies

Jyothika Sister Roshini Acted Tamil Movies

தமிழில் கார்த்திக் ஜோடியக சிஷ்யா, அருண் விஜய் ஜோடியாக துள்ளித்திரிந்த காலம் போன்ற படங்களில் நடித்த ரோஷினி, தெலுங்கில் சிரஞ்சீவி ஜோடியாக மாஸ்டர், பாலகிருஷ்ணா ஜோடியாக பவித்ர பிரேமா உள்பட 3 படங்களிலும் கன்னடத்தில் ஒரு படத்திலும் நடித்திருக்கிறார். 

66
Jyothika sisters Roshini and nagma

Jyothika sisters Roshini and nagma

ஒட்டுமொத்தமாக ஆறு படங்களில் மட்டுமே நடித்த ரோஷினி அதன் பின்னர் திருமணம் செய்துகொண்டதால் சினிமாவை விட்டு விலகிவிட்டார். பார்ப்பதற்கு ஜோதிகா போலவே இருக்கும் நடிகை ரோஷினியின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் படு வைரலாகி வருகின்றன.

இதையும் படியுங்கள்... அட்டர் பிளாப் ஆன ஜப்பான்; ஆனாலும் கார்த்தி ரொம்ப பிஸி.. மெய்யழகன் முதல் கைதி 2 வரை கைவசம் இத்தனை படங்களா?

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved