அட்டர் பிளாப் ஆன ஜப்பான்; ஆனாலும் கார்த்தி ரொம்ப பிஸி.. மெய்யழகன் முதல் கைதி 2 வரை கைவசம் இத்தனை படங்களா?
கார்த்தி கடைசியாக நடித்த ஜப்பான் படம் படு தோல்வி அடைந்தாலும் அவர் கைவசம் அரை டஜன் படங்கள் உள்ள நிலையில் அதன் பட்டியலை பார்க்கலாம்.
Karthi Movie Line Up
பருத்திவீரன் படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் கார்த்தி. இதையடுத்து தொடர்ந்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்த நடித்த கார்த்தி, இன்று தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்து வருகிறார். கடைசியாக இவர் நடித்த ஜப்பான் படம் பிளாப் ஆனாலும் அவருக்கான மவுசு குறையவில்லை. தற்போது அவர் கைவசம் 7 படங்கள் உள்ளன. அது என்னென்ன படங்கள் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
meiyazhagan
மெய்யழகன்
கார்த்தி நடிப்பில் தற்போது ரிலீசுக்கு தயாராகி வரும் திரைப்படம் மெய்யழகன். இப்படத்தை 96 என்கிற பிளாக்பஸ்டர் ஹிட் படத்தை கொடுத்த பிரேம்குமார் இயக்கி இருக்கிறார். இப்படத்தில் நடிகர் கார்த்தி உடன் நடிகர் அர்விந்த் சாமி, ஸ்ரீதிவ்யா மற்றும் ராஜ்கிரண் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்திற்கு கோவிந்த் வஸந்தா இசையமைத்து உள்ளார். 2டி நிறுவனம் சார்பில் சூர்யா - ஜோதிகா இணைந்து இப்படத்தை தயாரித்து உள்ளனர்.
Vaa vaathiyaare
வா வாத்தியாரே
மெய்யழகன் படத்தை போல் நடிகர் கார்த்தி நடித்து முடித்துள்ள மற்றொரு திரைப்படம் தான் வா வாத்தியாரே. இப்படத்தை சூதுகவ்வும், காதலும் கடந்து போகும் போன்ற படங்களை இயக்கிய நலன் குமாரசாமி இயக்கி உள்ளார். இப்படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார்.
Karthi 28
கார்த்தி 28
கார்த்தி நடிக்க உள்ள 28-வது படத்தை மாரி செல்வராஜ் இயக்க உள்ளார். கர்ணன், பரியேறும் பெருமாள், மாமன்னன் என வரிசையாக வெற்றிப்படங்களை கொடுத்துள்ள மாரி செல்வராஜ், இப்படத்தின் மூலம் முதன்முறையாக நடிகர் கார்த்தி உடன் இணைய உள்ளார். தற்போது பைஸன் பட ஷூட்டிங்கில் பிசியாக இருக்கும் மாரி செல்வராஜ், அப்படத்தை முடித்துவிட்டு கார்த்தி படத்தை இயக்குவார்.
Sardar 2
சர்தார் 2
கார்த்தி - பி.எஸ்.மித்ரன் கூட்டணியில் கடந்த 2022-ம் ஆண்டு திரைக்கு வந்த திரைப்படம் சர்தார். அந்த ஆண்டு தீபாவளிக்கு திரைக்கு வந்த இப்படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூலையும் வாரிக்குவித்தது. சர்தார் படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது. அப்படத்தின் ஷூட்டிங்கும் அடுத்த ஆண்டு தொடங்க வாய்ப்புள்ளது.
இதையும் படியுங்கள்... ஜான்வி கபூர் முதல் சுஹானா கான் வரை.. திருபாய் அம்பானி பள்ளியில் படித்த Star Kids.. ஃபீஸ் இத்தனை லட்சமா?
karthi, Pa Ranjith
பா.இரஞ்சித் படம்
நடிகர் கார்த்தியின் கெரியரில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய படங்களுள் மெட்ராஸ் படமும் ஒன்று. அப்படத்தை பா.இரஞ்சித் இயக்கி இருந்தார். இதையடுத்து அவர் இயக்கிய சார்பட்டா பரம்பரை படத்திலும் அவரின் பர்ஸ்ட் சாய்ஸாக கார்த்தி தான் இருந்தார். ஆனால் அதில் கார்த்தி நடிக்க மறுத்துவிட்டார். இதனால் தற்போது அவர்கள் கூட்டணியில் மற்றுமொரு தரமான படம் உருவாக உள்ளது.
Theeran 2
தீரன் 2
கார்த்தி நடிப்பில் கடந்த 2017-ம் ஆண்டு ரிலீஸ் ஆகி மாபெரும் வெற்றியை ருசித்த திரைப்படம் தான் தீரன் அதிகாரம் ஒன்று. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அப்படத்தின் இரண்டாம் பாகத்தை விரைவில் உருவாக்க உள்ளார் இயக்குனர் ஹெச்.வினோத். விஜய்யின் தளபதி 69 படத்தை இயக்கி முடித்ததும் தீரன் 2 பட பணிகளை அவர் தொடங்க உள்ளார்.
Kaithi 2
கைதி 2
கார்த்தி நடிப்பில் வெளியாகி முதன்முறையாக ரூ.100 கோடி என்கிற இமாலய வசூல் சாதனையை நிகழ்த்திய படம் தான் கைதி. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான இப்படம் மாபெரும் வெற்றியடைந்த நிலையில், விரைவில் அதன் இரண்டாம் பாகம் உருவாக உள்ளது. ரஜினியின் கூலி படத்தை இயக்கி முடித்ததும் கைதி 2 படத்தை லோகி இயக்குவார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... இன்னும் வாடகை வீட்ல தான் இருக்கோம்... 2 பசங்களுக்கு ஸ்கூல் பீஸ் கட்டணும் - இயக்குனர் வசந்த பாலனின் மறுபக்கம்