Kalki 2898 AD : பிரபல தெலுங்கு திரைப்பட இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் வருகின்ற ஜூன் மாதம் 27ஆம் தேதி உலக அளவில் வெளியாக உள்ள பிரம்மாண்ட திரைப்படம் தான் கல்கி.

பாலிவுட் உலகின் முன்னணி நட்சத்திரமான அமிதாபச்சன், கோலிவுட் உலகின் சூப்பர் ஹிட் நடிகரான உலகநாயகன் கமல்ஹாசன், தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகரான பிரபாஸ், நடிகைகள் தீபிகா படுகோன் மற்றும் திஷா பட்டாணி உள்ளிட்ட பல பிரபலங்களும் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே. 

நாக அஸ்வின், கீர்த்தி சுரேஷுக்கு தேசிய விருது வாங்கி கொடுத்த "நடிகையர் திலகம்" திரைப்படத்தை இயக்கி புகழ்பெற்றவர். இந்நிலையில் இந்த கல்கி படம் சுமார் 600 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகும் நிலையில் அது இரண்டு பாகங்களாக உருவாக உள்ளது. முழுக்க முழுக்க டெக்னாலஜியை பயன்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்திற்காகவே புஜ்ஜி என்கின்ற ஒரு கார் பிரத்தியேகமாக தயாரித்து பட குழுவினருக்கு வழங்கப்பட்டுள்ளது. 

இந்த கார் சென்னையில் உள்ள மகேந்திரா நிறுவனத்தில் தான் தயாரிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஆனந்த் மகேந்திரா வெளியிட்டுள்ள ஒரு பதிவில், "இயக்குனர் அஸ்வினி எதிர்காலத்தை குறித்த எண்ணத்தை பூர்த்தி செய்யும் அளவிற்கு எங்களால் ஒரு வாகனத்தை செய்து கொடுக்க முடிந்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம்". 

Scroll to load tweet…

"மேலும் இந்த கார் தயாரிப்பதில் முக்கிய பங்கு வகித்த சென்னையை சேர்ந்த வேலு மற்றும் அவருடைய குழுவினருக்கு தான் பாராட்டுகளை தெரிவிப்பதாகவும்" அவர் கூறியிருக்கிறார். மகேந்திரா நிறுவனத்தின் எக்ஸ்யூவி 700 காரை உருவாக்கியதில் பெரும்பங்கு வேலுவிற்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஆனந்த் மஹிந்திராவின் அந்த பதிவிற்கு தனது மரியாதை கலந்த நன்றிகளையும், நமது நாட்டில் உள்ள திறமையான வல்லுநர்களையும் பாராட்டி பேசி இருக்கிறார் இயக்குனர் நாக் அஸ்வின்.

சுடரின் கண்ணுக்கு தெரிந்த இந்து.. கண்ணீருடன் கலங்கும் குழந்தைகள் - நினைத்தேன் வந்தாய் சீரியல் அப்டேட்!