தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சமந்தா. பக்கா சென்னை பொண்ணான சமந்தா, மாஸ்கோவின் காவிரி என்ற திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் கால் வைத்தார். பாணா காத்தாடி, நான் ஈ, நீ தானே என் பொன் வசந்தம், அஞ்சான், கத்தி, தெறி உள்ளிட்ட பல படங்களில் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். 

இதையும் படிங்க: பெரிய இடத்து மாப்பிள்ளையாகும் பிரபாஸ்?... மெகா ஸ்டார் குடும்பத்து பெண்ணை கைபிடிக்க போறாராம்...!

தெலுங்கு சூப்பர் ஸ்டாரான நாகார்ஜூனாவின் மகன் நாக சைதன்யாவும், சமந்தாவும் 8 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். 2017ம் ஆண்டு இருவருக்கும் கோவாவில் திருமணம் நடைபெற்றது. அதன் பிறகு திரையில் தோன்றாமல் இருந்த சமந்தா, "சூப்பர் டீலக்ஸ்" படம் மூலம் அதிரடி கம்பேக் கொடுத்தார். பல நடிகைகளை திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு ஒதுக்கிவிடும் நிலையில், பெரிய இடத்து மாப்பிள்ளையை திருமணம் செய்து கொண்டிருந்தாலும் சமந்தா தொடர்ந்து நடித்து வருகிறார். 

சிறந்த படங்களை தேர்வு செய்து நடிப்பதற்கான முழு ஆதரவையும் நாக சைதன்யா வழங்கி வருகிறார். டோலிவுட், கோலிவுட் ரசிகர்கள் கண்வைக்கும் அளவிற்கு மகிழ்ச்சியாக இந்த இளம் காதல் தம்பதி வாழ்ந்து வருகின்றனர். திகட்ட திகட்ட காதலை அனுபவித்து வரும் சமந்தா, இன்று தனது 33வது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். 

இதையும் படிங்க: அஜித் அப்பா, அம்மா இவங்க தான்... இதுவரை யாருமே பார்த்திடாத அசத்தல் போட்டோ...!

காதல் மனைவிக்கு சர்ப்ரைஸ் கொடுக்க நினைத்த நாக சைதன்யா தனது வீட்டிலேயே சமந்தாவிற்காக சாக்லெட் கேக் செய்து கொடுத்து அசத்தியுள்ளார். ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் கணவர் மற்றும் தனது செல்ல நாய் குட்டியுடன் பிறந்தநாள் கொண்டாடிய சமந்தா அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

இதையும் படிங்க: பெரிய இடத்து மாப்பிள்ளையாகும் பிரபாஸ்?... மெகா ஸ்டார் குடும்பத்து பெண்ணை கைபிடிக்க போறாராம்...!

அந்த வீடியோவை பார்த்த த்ரிஷா, அனுபமா, ரெஜினா கசாண்ட்ரா, பார்வதி உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலரும் சமந்தாவிற்கு தங்களது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். கணவரின் அன்பு மழையோடு சேர்த்து, வாழ்த்து மழையிலும் மகிழ்ச்சியாக நனைந்து வருகிறார் சமந்தா...