வாட்ஸ் ஆப் குரூப்பில் வெடித்த பிரச்சனை தற்போது வழக்கு வரை வந்துள்ளது.

இந்த பிரச்சனைக்கு முக்கிய காரணமாக கூறப்படுவது, பிரபல நாடக நடிகர் எடக்கு  - மடக்காக விட்ட வார்த்தைகள் தான். இந்த பிரச்சனையில் நடிகை ரஞ்சனி விடாப்பிடியாக உள்ளதால், அந்த நாடக நடிகர் தன்னிடம் மன்னிப்பு கேட்டே ஆக  வேண்டும் என்றும், இல்லை என்றால் தான் ஒரு வழக்கறிஞர் என்பதை அவருக்கு நிரூபிப்பேன் என விடாப்பிடியாக உள்ளார்.

நடிகை ரஞ்சனி:

மேலும் செய்திகள்: பதற வைத்த சன்னி லியோன்... அசிங்கமாக திட்டிய கணவர்..! வாழைப்பழத்தை வைத்து செஞ்ச வேலைய பாருங்க! வீடியோ
 

தமிழில் இயக்குனர் பாரதி ராஜா இயக்கத்தில், கடந்த 1985 ஆம் ஆண்டு வெளியான, முதல் மரியாதை படத்தில், முன்னணி கதாப்பாத்திரத்தில் அறிமுகமானவர். இவரின் எதார்த்தமான நடிப்பு முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்தது. அந்த படத்தில் இவர் இடம்பெற்ற ஒரே ஒரு பாடலான "அந்த நிலாவை  தான் என் கையில பிடித்தேன்' இன்று வரை பலரது ஃபேவரட்  பாடல்.

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து, தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்து, மிகவும் பிரபலமானார். திருமணத்திற்கு பின், தமிழ் திரையுலகை  விட்டு விலகினாலும், மலையாளத்தில் ஒரு சில சீரியல்களில் நடித்து வருகிறார்.

வெடித்த பிரச்சனை:

நடிகை ரஞ்சனி, தென்னிந்திய நடிகர் சங்கத்தில் ஆயட்கால உறுப்பினராக இருக்கிறார். இவர்களுக்காக ஒரு வாட்ஸ் ஆப் குரூப் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் தென்னிந்திய நடிகர் சங்கத்தை சேர்ந்த  நடிகர்கள் மற்றும் நாடக நடிகர்கள் பலர் உள்ளனர்.

மேலும் செய்திகள்: ஓ மை கடவுளே... கொரானாவுக்கு முன் இதற்கொரு தடுப்பூசி கண்டுபிடிக்கணும்! விஜய் சேதுபதியின் வேதனை ட்விட்!
 

இந்நிலையில் இந்த வாட்ஸ் ஆப் குரூப்பில் இருந்த, நாடக நடிகர் வாசுதேவனை ரஞ்சனி குறிப்பிட்டு, இவர் நடிகரா என கேட்டதாக கூறப்படுகிறது.

இதற்கு வாசுதேவன், 'நான் நடிகர் தான், ஆனால் , உங்கள் தொழில் வேற'என நக்கலாக பதில் கொடுத்துள்ளார். இந்த வார்த்தை ரஞ்சனியை மிகவும் காயப்படுத்தியுள்ளது.

எனவே அவர் தன்னிடம் மன்னிப்பு கூறியே ஆக  வேண்டும் இல்லை என்றால், அவர் மீது வழக்கு தொடரின் என விடாப்பிடியாக உள்ளாராம் ரஞ்சனி.

வாசுதேவன் விளக்கம்:

அதே  நேரத்தில், வாசுதேவன்.. நான் நாடக நடிகர், அவர் சினிமா நடிகை என்பதால் இவருடைய தொழிலும் வேறு என்கிற அர்த்தத்திலேயே இதை கூறினேன் என கூறியபோதிலும், நடிகை ரஞ்சனி இன்னும் சமாதானம் ஆகவில்லை என்றே கூறப்படுகிறது. 

மேலும் செய்திகள்:படுக்கை அறை காட்சியில் தாராளம் காட்ட தனி சம்பளம்! 'முகமூடி' நடிகையால் விழி பிதிங்கி நிற்கும் தயாரிப்பாளர்கள்!
 

தென்னிந்திய நடிகர் சங்க வாட்ஸ் ஆப் குரூப்பில் நடந்துள்ள இந்த பிரச்சனை, பிரபல நாளிதழ் ஒன்றின் மூலம் தற்போது தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.