கொரோனா வைரஸ் தாக்கம் உயிர் பயத்தை சிலருக்கு காட்டி வரும் அதே வேலையில், திடீர் என போடப்பட்ட ஊரடங்கு காரணமாக கூலி தொழிலாளர்கள் பலருக்கு பசியின் வலி, வேதனையையும் காட்டி வருகிறது.

இந்தியா முழுவதும், கடந்த ஒன்றரை மாதங்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அணைத்து வேலைகளும் முடங்கி போய்  உள்ளது. ஐடி தொழில், மாற்று பலர் வீட்டில் இருந்தபடியே தங்களுடைய பணியை செய்து வருகிறார்கள்.

வேலைக்கு சென்றால் தான் அடுத்த வேலை  சாப்பாடு என்று இருக்கும் பல ஏழை, எளிய மக்கள்  பட்டினியால் வாடும் நிலை உருவாகி உள்ளது.

மக்கள் கஷ்டப்பட கூடாது என்பதில் மிகவும் கவனமாக, மத்திய மாநில அரசுகள் மற்றும்  சமூக ஆர்வலர்கள் தானாக வந்து உதவிகள் செய்துவந்தாலும்,  கடைக்கோடி மக்கள் வரை அது சென்றடைகிறதா? என்றால் சந்தேகமே... ?

அந்த வகையில், தன்னால் முடிந்தவரை மக்களுக்கும், சினிமா கலைஞர்களுக்கும் உதவி வருபவர்களில் ஒருவர், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி.

இவர் பசியால் வாடும் மக்களை கண்டு, மிகவும் மன  வேதனையோடு ஒரு ட்விட் போட்டுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், பசி என்றொரு நோய் இருக்கு... அதுக்கு ஒரு தடுப்பூசி கண்டுபிடிச்சா எவ்ளோ நல்லா இருக்கும்... ஓ மை கடவுளே’ என்று ட்விட் செய்துள்ளார்.

கொரோனா மருந்து  இதுவரை கண்டுபிடித்து விட்டதாக அதிகார பூர்வ தகவல் இதுவரை வெளியாகாததால் என்னவோ, இப்படி ஒரு ட்விட் செய்துள்ளார் விஜய் சேதுபதி. இவரின் இந்த கருத்துக்கு பலர் தங்களுடைய வரவேற்பை தெரிவித்து வருகிறார்கள்.