இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான, 'முகமூடி' படத்தில், நடிகர் ஜீவாவிற்கு ஜோடியாக அறிமுகமானவர் நடிகை பூஜை ஹெக்டே. இந்த படம் தோல்வியை தழுவியதால், இவருக்கு எதிர்பார்த்த அளவிற்கு தமிழ் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இந்த படத்தை தொடர்ந்து தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் கவனம் செலுத்த துவங்கினார். இந்நிலையில் இவர், நடிகர் சூர்யா, இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிக்க உள்ள 'அருவா ' படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது.

எனவே கிட்ட தட்ட எட்டு வருடங்களுக்கு பின், அம்மணி மீண்டும் தமிழ் படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால்  தற்போது. அதற்கும் வழி இல்லாமல் போனது. காரணம் தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி, நடிகை ராஷி  கண்ணா இந்த படத்தில் நாயகியாக  நடிக்கிறார் என கூறப்பட்டது.

மேலும் இதுகுறித்து, சமீபத்தில் ட்விட்டர்  பக்கத்தில் பேசிய, பூஜா...   இரண்டு தமிழ் படங்களில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் இந்த வருடம் தமிழ் படத்தில் நடிப்பேன் என எதிர்பார்ப்பதாகவும் பூஜா கூறியுள்ளார்.

எப்போதும்  சூடேற்றும் புகைப்படங்களை வெளியிட்டு, சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் பூஜா ஹெக்டே நடிப்பில் சமீபத்தில் வெளியான தெலுங்கு  திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதால், தன்னுடைய சம்பளத்தையும்  தாராளமாக உயர்த்தியுள்ளார். ஏற்கனவே வாங்கிய சம்பளத்தை விட, 50 சதவீதம் அதிகமாக கேட்கிறாராம். அதே போல் படுக்கை அறை  காட்சி என்றால், நடிக்க மாட்டேன் என சொல்லமால் எந்த அளவிற்கு தாராளம் காட்ட வேண்டுமோ அந்த அளவிற்கு கோடியில் சம்பளம் கேட்டிறாராம்.

தன்னை புக் பண்ண வரும் போதே முதல் நிபந்தனையாக சம்பள விஷயத்தை இவர் கூறி விடுவதால், விழி பிதுங்கி நிற்கிறார்களாம் தயாரிப்பாளர்கள்.