தமிழகத்தில் எது நடந்தாலும் உண்மைக்கு நாங்கள் குரல் கொடுப்போம், மக்களால் தான் நாங்கள் வாழ்கிறோம் அவர்களுக்கு அநீதி நடக்க விட மாட்டோம் என கூறி நடிகர் சங்கதினர் முந்திக்கொள்வார்கள் , அப்படித்தான் காலகாலமாக நடந்து வந்தது.
ஆனால் தற்போது நிலவி வரும் அரசியல் சூழல் குறித்து, தற்போது வரை நடிகர் சங்கத்தை சேர்ந்தவர்கள் யாரும் வாய்திறக்காமல் உள்ளனர்.
கடந்த மாதம் நடந்து முடிந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கூட இவர்கள் லேட் ரியாக்க்ஷன் தான் கொடுத்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ஓபிஎஸ் க்கு ஆதரவாக, நடிகர் கமல்ஹாசன், மற்றும் காங்கிரஸில் முக்கிய பதவி வகித்தாலும் அதையும் மீறி நடிகை குஷ்பூ தன்னுடைய ஆதரவை கொடுத்துள்ளார் மேலும் பல கேள்விகளை சசிகலாவிற்கு எதிராகவும் எழுப்பி வருகிறார் குஷ்பூ.
அதே போல் அரவிந்த் சாமி, ஜி.வி.பிரகாஷ், ஸ்ரீ பிரியா, சித்தார்த், கௌதமி போன்ற பலர் நடிகர்கள் தன்னெழுச்சியாக தங்களுடைய ஆதரவை கொடுத்து வருகின்றனர். ஆனால் அவர்களுடைய தலைமையாக விளங்கும் நடிகர் சங்கம் இதில் தலையிடவில்லை என்ற விஷயம் ஏன் என கேள்வியை எழுப்புகிறது.
இந்த விஷயத்திலும் லேட் ரியாக்க்ஷன் தான் கொடுப்பார்களா பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
