Naai Sekar Returns is in London : நாய்சேகர் படத்திற்கான பாடலை உருவாக்க வடிவேலு உள்ளிட்ட குழு லண்டன் சென்றுள்ளனர். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தில் நடித்தபோது அப்படத்தின் தயாரிப்பாளர் ஷங்கருடன் வடிவேலுவுக்கு மோதல் ஏற்பட்டது. இதன் காரணமாக படத்தில் நடிக்க மறுத்த வடிவேலு மீது ஷங்கர் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்திருந்தார். இதையடுத்து வடிவேலுவுக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டு, அவர் படங்களில் நடிக்க தடை விதிக்கப்பட்டது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதன் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக படங்களில் நடிக்காமல் இருந்து வந்தார் வடிவேலு சமீபத்தில் அவர் மீதான ரெட் கார்டு நீக்கப்பட்டதை அடுத்து மீண்டும் படங்களில் நடிக்க அனுமதி அளிக்கப்பட்டது.

தற்போது வடிவேலுவுக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. அவர் முதலாவதாக சுராஜ் இயக்கத்தில் உருவாகும் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் (naai sekar returns) படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இப்படத்தில் வடிவேலு முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். முழுக்க முழுக்க நகைச்சுவை படமாக தயாராக உள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது பூஜையுடன் தொடங்கி உள்ளது. 

 இந்த படத்தில் குக் வித் கோமாளி பிரபலம் சிவாங்கி, டாக்டர் பட பிரபலம் ரெடின், நடிகர் ஆனந்தராஜ், ஆர்.ஜே.விக்னேஷ் காந்த் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்புக்காக லண்டன் பரந்துள்ள படக்குழுவுடன் அங்கு வடிவேலுவின் பாடலை உருவாக்கி வருகின்றனர். இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதியுடன் நடிக்க வடிவேலு ஒப்பந்தமாகியுள்ளார்.