தமிழ் தெலுங்கு மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள இந்தப் படம் தமிழில் தான் படமாக்கப்பட்டது மற்றும் மூன்று மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டது.
பிரபல இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் ஆண்ட்ரியா தற்போது நடத்து முடித்துள்ள பிசாசு 2 படத்தின் வெளியிட்டு தேதி வெளியாகியுள்ளது. அதன்படி வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதி இந்த படம் திரையரங்குகளில் வெளியாகும். இது குறித்தான போஸ்டரில் "பேய் பிடிக்க நீங்கள் தயாரா?" என குறிப்பிட்டு படம் வரும் 31 அன்று விநாயகர் சதுர்த்தி சிறப்பாக உலகம் முழுவதும் வெளியாக உள்ளது என தெரிவித்துள்ளார். இதில் ஆண்ட்ரியா கால்கள் இல்லாமல் சிகப்பு நிற உடைகள் பயங்கரமாக காட்சியளிக்கிறார்.
மேலும் செய்திகளுக்கு...மனைவியாக வாழ்ந்தால் மாதம் 25 லட்சம் சம்பளம் : மனம் நொந்த விஷால் பட நடிகை !
2014 -ம் ஆண்டு வெளிவந்த பிசாசு திரைப்படத்தின் தொடர்ச்சியாக இந்த இரண்டாம் பாகம் தயாரிக்கப்படுகிறது. விஜய் சேதுபதி இதில் காமியோ ரோலில் நடித்துள்ளார். இவர்களுடன் பூர்ணா, சந்தோஷ் பிரதாப், நமீதா கிருஷ்ணமூர்த்தி மற்றும் அஜ்மல் ஆகியோரும் நடித்துள்ளனர். படப்பிடிப்புகள் முடிவடைந்து பின்னணி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தமிழ் தெலுங்கு மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள இந்தப் படம் தமிழில் தான் படமாக்கப்பட்டது மற்றும் மூன்று மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டது. சமீபத்தில் ஆண்ட்ரியா பேசிய வீடியோவில் தெலுங்கு டப்பிங் பேசும்போது நாயகி தடுமாறியிருந்தார்.
மேலும் செய்திகளுக்கு...முன்பு முதல்வர்..தற்போது பிரதமர்...இந்திரா காந்தியாக எமர்ஜென்சியில் கலக்கும் கங்கனா..டீசர் உள்ளே!
மின்னதாக பிசாசு 2 படத்தில் இருந்து டீசர் வெளியாகி இருந்தது. ஆண்டியாவின் திரில்லான லுக்குடன் கார்த்திக் ராஜாவின் பயமுறுத்தும் இசை பின்னணியில் வெளியாகிய இந்த வீடியோவில் சிகப்பு நிற உடையில் ஆண்ட்ரியா பயமுறுத்தும் காட்சிகள் இடம் பெற்றிருந்தன. அதோடு விஜய் சேதுபதி காமியோவும் காட்டப்பட்டிருந்தது. ஒரு மலைப்பகுதியில் நடக்கும் திரில்லர் கொலை பின்னணியாக இந்த படம் இருக்குமே தெரிகிறது.

முன்னதாக கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான பிசாசு படத்தை மிஸ்கின் எழுதி இயக்கி இருந்தார். இதில் ராதாரவி, கல்யாணி நடராஜன், பிரக்யா மார்டின் மற்றும் ஹரி உத்தமன் ஆகியோர் நடித்திருந்தார். இதில் நாயகனாக நாகா என்பவர் நடித்திருந்தார். நல்ல விமர்சனங்களுக்கு உள்ளான இந்த படம் தெலுங்கில் பிசாச்சி என வெளியானது. அதோடு கன்னடத்தில் ராக்ஷசி என்றும், இந்தியில் நானு கி ஜானு என்று ரீமிக்ஸ் செய்யப்பட்டது.
மேலும் செய்திகளுக்கு...நட்சத்திராவின் கணவரை திட்டி தீர்த்த ஸ்ரீநிதி...திருமணத்திற்கு பின்னர் என்ன செய்தார் தெரியுமா?
ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மிஸ்கின் இந்த படத்தை உருவாக்கி பாராட்டுகளை பெற்ற கையேடுஇந்த படம் உருவானது. பிசாசு முதல் பக்கத்திற்கு இளையராஜா பின்னணி இசை கொடுத்திருந்தார்.
