திரையுலகில் லட்சக்கணக்கான படங்கள் வெளிவந்தாலும், அது ஒரு சில படங்கள் மட்டுமே எப்போதுமே மனதை விட்டு நீங்காமல், ரசிகர்கள் மனதில் ஆழ பதிந்துவிடும். அந்த வகையில், நடிகர் திலகம் சிவாஜி கணேசன், நடிப்பில் உருவாகி இருந்த 'முதல் மரியாதை' படமும் ஒன்று.

கடந்த 1985 ஆம் ஆண்டு, இயக்குனர் பாரதி ராஜா இந்த படத்தை மிகவும் எதார்த்தமான கிராமத்து சூழலை வைத்து இயக்கி இருந்தார். மேலும் ராதா, வடிவுக்கரசி, ரஞ்சனி, தீபன், சத்யராஜ் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்திருந்தனர். 

இந்த படத்தில் அந்த நிலாவத்தான் நான் கையில புடிச்ச... என்கிற பாடலில் தன்னுடைய அப்பாவித்தனமான முகத்துடன், ஆழ காதலியும் வெளிப்படுத்தியிருந்தவர் தீபன்.

இந்த படத்திற்கு பின் எந்த படங்களிலும் நடிக்காமல், கல்வி நிறுவனங்களை நடத்தி வந்த இவர், 35 வருடங்களுக்கு பின் மீண்டும் 'C/O காதல்' என்கிற படத்தின் மூலம் நடிக்க வந்திருக்கிறார். 

அறிமுக இயக்குனர் ஹெமம்பர் ஜேஸ்தி இந்த படத்தை இயக்கியள்ளார்.  முதலில் நடிக்க மறுப்பு தெரிவித்த தீபன், கதையை கேட்டதும் மீண்டும்  நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த படத்திற்காக நடிகர் தீபன், உடல் எடையை குறைத்து... தன்னுடைய வழக்கமான ஹேர் ஸ்டைல் போன்றவற்றை மாற்றி கொண்டு திரையில் தோன்றவுள்ளாராம். 35 வருடங்களுக்கு பின் மிக முக்கிய கதாப்பாத்திரத்தில் இவர் நடிக்க உள்ளது ரசிகர்கள் மத்தியில் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.