நடந்து முடிந்த தயாரிப்பாளர் சங்க தேர்தலில், வெற்றி பெற்ற தயாரிப்பாளர் சங்க தலைவர் முரளி ராமசாமி உட்பட, வெற்றிபெற்ற நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக உதயநிதியை சந்தித்தனர். 

திரைப்பட பிரச்சனைகள், நடிகர்கள் திடீர் என பிரச்சனை செய்தாலோ, பட தலைப்பில் பிரச்சனை ஏற்பட்டாலோ முதலில் இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் நாடுவது தயாரிப்பாளர் சங்கத்தை தான். இங்கு கொடுக்கப்படும் புகார்கள், இரு தரப்பையும் அழைத்து வைத்து சமரசமாக பேசி முடிக்கப்படும். முடியாத பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அந்த வகையில் கடந்த மூன்று வருடங்களாக, தயாரிப்பாளர் சங்க தலைவராக தன்னுடைய பணியை சிறப்பாக செய்து வந்தார் முரளி ராமசாமி.

அவரின் பதவிக்காலம் முடிவுக்கு வந்த நிலையில், மீண்டும் தயாரிப்பாளர் சங்கத்திற்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் மீண்டும் முரளி ராமசாமி தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவிக்கு போட்டியிட்டார். இவரை எதிர்த்து, தயாரிப்பாளர் மன்னன் போட்டியிட்ட நிலையில், முரளி ராமநாராயணன் வெற்றி பெற்றார். இதை தொடர்ந்து பிரபலங்கள் பலர் வெற்றி பெற்ற முரளி ராமசாமி உட்பட அனைத்து நிர்வாகிகளுக்கும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.

ரஜினி படத்திற்கு அந்த விஷயத்தில் நோ சொல்லிட்டு... ஷாருக்கானுக்கு யஸ் சொன்னாரா நயன்? மும்பை சென்றதன் பின்னணி!

மேலும் சந்திரபிரகாஷ் ஜெயின் , செயலாளராக மீண்டும் தேர்தெடுக்கப்பட்டுள்ளார். அதே போல் R. ராதாகிருஷ்ணன் மற்றும் S. கதிரேசன் ஆகியோர் துணை தலைவர்களாக தேர்தெடுக்கப்பட்டுள்ளனர். G.K.M. தமிழ் குமரன் மற்றும், அர்ச்சனா கல்பாத்தி அவர்களுக்கும், இணை செயலாளராக தேர்தெடுக்கப்பட்டுள்ளனர். S. சௌந்தரபாண்டியன் உட்பட மொத்தம் 26 செயற்குழு உறுப்பினர்களளாக தேர்வாகியுள்ளனர்.

இளம் வயது குந்தவையாக நடித்தது... இந்த சன் டிவி சீரியல் நடிகையின் மகளா? யாருனு தெரிஞ்ச ஷாக் ஆகிடுவீங்க!

இவர்கள் இன்று நடிகரும், தயாரிப்பாளரும், விளையாட்டு துறை அமைச்சருமான உதயநிதியை மரியாதை நிமித்தமாக சந்தித்துள்ளனர். இதுகுறித்து புகைப்படம் வெளியிட்டு, உதயநிதி கூறியுள்ளார். இந்த பதிவில் அவர் கூறியுள்ளதாவது, "தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள, அச்சங்கத்தின் தலைவர் 'தேனாண்டாள்' முரளி ராமசாமி, துணைத் தலைவர் தமிழ்குமரன் உள்ளிட்ட புதிய நிர்வாகிகள் இன்று என்னை முகாம் அலுவலகத்தில் சந்தித்தனர். அவர்களின் பொறுப்புமிக்க பணி சிறக்க என் அன்பையும் வாழ்த்தையும் தெரிவித்தேன்". என கூறியுள்ளார்.