mumthaj says balajies wife is unhygienic
பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன், கடந்த ஞாயிறு அன்று தொடங்கி விறுவிறுப்பாக போய் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சிக்கு என தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. பொழுது போக்கிற்கான நிகழ்ச்சியாக இதனை பார்த்தாலும், இதனுள் ஒரு மிகப்பெரிய அரசியலை நம்மால் பார்க்க இயலும்.

இந்த அரசியலின் ஒரு பங்காக, பிக் பாஸ் வீட்டின் தலைவரை நேற்று பிக் பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் சேர்ந்து, தேர்வு செய்தனர். தலைவர் பதவிக்கு போட்டி இட்ட மும்தாஜ், ஜனனி ஐயர், மஹத் இந்த மூவரில், ஜனனி ஐயரை தலைவராக தேர்வு செய்தனர் சக போட்டியாளர்கள்.

அதன் பிறகு இந்த பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்ற பட வேண்டிய நபர் யார்? என நாமினேட் செய்யும் போது, மும்தாஜ் பாலாஜியின் மனைவி நித்யாவை தேர்வு செய்தார். அதற்கு அவர் கூறிய காரணம் நித்யாவை அசிங்கப்படுத்துவது போல இருந்தது. நித்யாவிடம் சுத்தமான பழக்கவழக்கங்கள்இல்லை. எனவே அவரை இந்த வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும். என மும்தாஜ் கூறினார்.
இந்த நிகழ்ச்சிக்கு வரும் முன்பே, இதனை எத்தனை பேர் பார்க்கப் போகிறார்கள் என்பது அறிந்தும், மும்தாஜ் இப்படி பேசி இருப்பது, அவர் மீதான மரியாதையை அவரே கெடுத்து கொண்டது போல இருக்கிறது. ஆனால் பிற போட்டியாளர்கள் இந்த காரணம் கூறும் விஷயத்தில், மிகவும் நாசுக்காகவே நடந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
