கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி உலக அளவில் வெளியாகி தனது இரண்டாவது வாரத்திலும் சக்கை போடு போட்டு வருகிறது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம். பல்வேறு நாடுகளில் வெற்றிகரமாக ஓடிவரும் இந்த திரைப்படம் இதுவரை சுமார் 500 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

மேலும் இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பாகவே இந்த படத்தில் இருந்து வெளியான சில பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது, குறிப்பாக பிரபல நடிகை தமன்னாவின் வசீகரமான நடனத்தில் வெளியான காவாலா என்ற பாடல் உள்ளூர் முதல் உலக நாடுகள் வரை பல இடங்களில் சூப்பர் ஹிட் ஆனது. 

குறிப்பாக அண்மையில் இந்தியாவின் ஜப்பான் நாட்டு தூதர் ஹிரோஷி சுசுகி என்பவர் காவாலா பாடலுக்கு நடனம் ஆடியது குறிப்பிடத்தக்கது. இளசுகள் முதல் பெரியவர்கள் வரை பலரையும் இந்த பாடல் வெகுவாக கவர்ந்துள்ளது என்றால் அது மிகையல்ல. 

திடீரென தியேட்டருக்கு விசிட் அடித்து ஜெயிலர் பட டிக்கெட் விற்பனை செய்த ஜிவி பிரகாஷ் - காரணம் என்ன?

இந்நிலையில் ஸ்ட்ரிக்டாக வலம் வரும் மும்பை போலீஸ் அதிகாரி ஒருவர் தற்பொழுது இந்த காவாலா பாடலுக்கு மிக நேர்த்தியாக நடனம் ஆடி உள்ளது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. அமோல் காம்ப்ளே என்ற அந்த மும்பை நகர போலீஸ் அதிகாரி, கடந்த ஜூலை 21ஆம் தேதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு டான்ஸ் ஸ்டுடியோவில் இருந்து காவாலா பாடலுக்கு நடனமாடும் வீடியோவை பதிவேற்றம் செய்துள்ளார். 

View post on Instagram

இது பல லட்சக்கணக்கான மக்களால் பார்வையிடப்பட்டுள்ளது, கடந்த சில நாட்களாக காவாலா பாடலுடைய ட்ரெண்டிங் குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் எகிறி உள்ளது என்றால் அது மிகையல்ல. தம்மன்னாவின் நடனம், அருண்ராஜா காமராஜாவின் வரிகள், அனிருத்தின் இசை மட்டுமல்லாமல் இந்த பாடலை இயக்கிய நடன இயக்குனர் ஜானி மாஸ்டர் அவர்களின் திறமையே இந்த பாடலின் வெற்றிக்கு காரணம். 

தனது ஆன்மீக சுற்றுலாவை முடித்து, அடுத்த கட்டமாக பல அரசியல் தலைவர்களை சந்தித்து வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், செப்டம்பர் மாத இரண்டாம் வாரத்தில் தனது அடுத்த பட பணிகளை துவங்குவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

என்ன பழக்கம்-னா இது! ஒரேநாளில் கல்யாணம்; ஹாப்பியாக வெட்டிங் டே கொண்டாடிய சாந்தனு - பகத் பாசில்! வைரல் கிளிக்ஸ்