திடீரென தியேட்டருக்கு விசிட் அடித்து ஜெயிலர் பட டிக்கெட் விற்பனை செய்த ஜிவி பிரகாஷ் - காரணம் என்ன?

நடிகரும், இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் குமார், சென்னையில் உள்ள திரையரங்கம் ஒன்றில் டிக்கெட் விற்பனை செய்த வீடியோ வைரலாகி வருகிறது.

GV Prakash Kumar selling Jailer movie tickets in Theatre as part of Adiyae movie Promotion

தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமாகி தற்போது பிசியான நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் ஜிவி பிரகாஷ் குமார். டார்லிங் படம் மூலம் ஹீரோவாக அறிமுகமான ஜிவி, அடுத்தடுத்து நாச்சியார், சிகப்பு மஞ்சள் பச்சை, பேச்சிலர், செல்பி என ஏராளமான ஹிட் படங்களை கொடுத்துள்ளார். தற்போது இவர் கைவசம் காதலிக்க நேரமில்லை, 4ஜி, அடியே, இடி முழக்கம், டியர், கள்வன் உள்பட அரை டஜன் படங்கள் உள்ளன.

இதில் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடித்துள்ள அடியே திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 25-ந் தேதி திரைக்கு வர உள்ளது. இப்படத்தில் ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக 96 படத்தில் குட்டி திரிஷாவாக நடித்திருந்த கெளரி கிஷான் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான அடியே படத்தின் டிரைலரும் வேறலெவலில் இருந்ததால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எகிறி உள்ளது.

இதையும் படியுங்கள்... தன்னைவிட 22 வயது குறைவான நடிகையுடன் ரொமான்ஸ் பண்ண போகிறாரா விஜய்? - தளபதி 68 ஹீரோயின் அப்டேட் இதோ

அடியே படத்தின் புரமோஷன் பணிகளும் ஒரு பக்கம் பிசியாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், நடிகர் ஜிவி பிரகாஷ் திடீரென சென்னையில் உள்ள திரையரங்கம் ஒன்றிற்கு சென்று அங்கு டிக்கெட் விற்பனை செய்துள்ளார். அதுவும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படத்துக்கு. இதுகுறித்த வீடியோ காட்சிகள் வெளியாகி இணையத்தில் படு வைரலாகி வருகிறது.

அவர் ஜெயிலர் பட டிக்கெட் விற்பனை செய்ததற்கு காரணமே அடியே திரைப்படம் தான். அப்படத்தின் புரமோஷனுக்காக தான் அவர் தியேட்டரில் டிக்கெட் விற்பனை செய்திருக்கிறார். அடியே படத்திற்காக ஜிவி பிரகாஷ் செய்துள்ள இந்த வித்தியாசமான புரமோஷன் இணையத்தில் கவனம் ஈர்த்துள்ளது. புரமோஷனுக்கு வர மறுக்கும் நடிகர், நடிகைகளுக்கு மத்தியில் ஜிவி பிரகாஷ் இப்படி வித்தியாசமாக புரமோஷன் செய்துள்ளதற்கு பாராட்டுக்களும் குவிந்து வருகிறது.

இதையும் படியுங்கள்... "அடுத்த சூப்பர் ஸ்டார் விஜயும் இல்ல.. அஜித்தும் இல்ல.." "அவர் தான்" - கான்பிடெண்டாக சொன்ன இயக்குனர்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios