MS. Subulakshmi Grand Daugther singing first time in movie

தில்லி மற்றும் தாதா சாஹிப் குறும்பட விழாவில் வென்ற "ஈஷா" எனும் குறும்படம் தற்போது குறள் 146 என்ற பெயரில் திரைப்படமாகத் தயாராகி வருகிறது. முதல் கட்ட பணியாக பாடல் பதிவுடன் ஆரம்பமானது. உமா ஷங்கர் இயக்கும் இத்திரைப்படத்தில் குரு கல்யாண் இசையில் 5 பாடல்கள் இடம்பெறவுள்ளன. முதல் பாடல் பதிவு இன்று நடைபெற்றது. இதற்கான பாடல் வரிகள் சித்தர் பட்டினத்தார் அவரது வரிகளிலிருந்து தேர்வு செய்யப்பட்டுள்ளது. இப்பாடலை பாரத ரத்னா விருது பெற்ற இசை மேதை m.s. சுப்புலக்ஷ்மி அவர்களின் இசைவாரிசான செல்வி. s. ஐஸ்வர்யா பாடினார் அவருடன் இணைந்து இசை அமைப்பாளர் குரு கல்யாண் பாடினார். 

M.S. சுப்புலக்ஷ்மி அவர்களின் இசைவாரிசான செல்வி. s. ஐஸ்வர்யா திரைத்துறையில் பாடும் முதல் பாடல் இதுவாகும். "அன்னை எத்தனை எத்தனையோ" என்ற இந்தப் பாடல் ஸ்ட்ரிங் வாத்தியங்களைப் பிரதானமாகக் கொண்டு கையாளப்பட்டுள்ளது. சித்தரின் பாடல் வரிகளுக்கேற்ப இசையமைக்கப்பட்டுள்ளது. ஈஷா குறும்படத்தில் பணியாற்றிய ஒளிப்பதிவாளர் கிறிஸ்டோபர் ஜோசப் இத்திரைப்படத்திலும் ஒளிப்பதிவு செய்ய உள்ளார்.

கலை இயக்குநர் உமா ஷங்கர் இத்திரைப்படத்தின் மூலம் இயக்குநர் ஆகிறார். கடந்த 17 வருடங்களாகத் திரைத்துறையில் உமா ஷங்கர் பல்வேறு துறைகளில் அனுபவம் பெற்றவர். இவருடைய முதல் குறும்படமான ஈஷா பல்வேறு குறும்பட விழாக்களில் வெற்றி பெற்று வருகிறது. (டில்லி ஷார்ட் பிலிம், தாதா சாஹிப் பால்கே பெஸ்டிவல், கேன்ஸ் பெஸ்டிவல்) விருதுகளைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.