Yogi babu : சிக்சர், பவுண்டரிகளாக அடிச்சு நொறுக்க யோகிபாபுவுக்கு கிரிக்கெட் பேட் பரிசளித்த ‘தல’
தளபதி விஜய்யை தொடர்ந்து தற்போது ‘தல’யும் நகைச்சுவை நடிகர் யோகிபாபுவுக்கு கிரிக்கெட் பேட் ஒன்றை பரிசாக வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் யோகிபாபு. இவர் காமெடியனாக மட்டுமின்றி கதையின் நாயகனாகவும் நடித்து கலக்கி வருகிறார். சமீபத்தில் கூட இவர் கதையின் நாயகனாக நடித்த பொம்மை நாயகி என்கிற திரைப்படம் ரிலீசாகி விமர்சன ரீதியாக மாபெரும் வரவேற்பை பெற்று இருந்தது. ஷான் என்கிற புதுமுக இயக்குனர் இயக்கியிருந்த இப்படத்தை பா.இரஞ்சித் தான் தயாரித்து இருந்தார். இதையடுத்து டஜன் கணக்கான படங்களை கைவசம் வைத்து செம்ம பிசியாக நடித்து வருகிறார் யோகிபாபு.
நடிகர் யோகிபாபு படங்களை நடிப்பதை தாண்டி கிரிக்கெட் விளையாட்டின் மீது அதீத ஆர்வம் கொண்டவர் ஆவார். ஷூட்டிங் சமயத்தில் கூட ஓய்வு கிடைத்தால் படக்குழுவினருடன் கிரிக்கெட் விளையாடுவதை வழக்கமாக வைத்துள்ளார் யோகி. இதுதவிர நண்பர்களுடன் சேர்ந்து இவர் கிரிக்கெட் விளையாடும் வீடியோக்களும் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரல் ஆவது உண்டு. கிரிக்கெட்டில் சேவாக் மாதிரி அதிரடி ஆட்டக்காரராகவே விளையாடும் யோகிபாபு சிக்சர், பவுண்டரிகளாக பறக்க விடுவார்.
இதையும் படியுங்கள்... தோனி என்டர்டெய்ன்மென்ட் தயாரிக்கும் 'LGM’ படத்தை கிளாப் அடித்து துவங்கி வைத்த சாக்ஷி சிங் தோனி! வைரல் போட்டோஸ்
யோகிபாபு கிரிக்கெட் ஆடுவதை பார்த்து வியந்து போன நடிகர் விஜய், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அவருக்கு கிரிக்கெட் பேட் ஒன்றை பரிசாக வழங்கி இருந்தார். ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள அந்த பேட் உடன் வீடியோ ஒன்றை எடுத்து டுவிட்டரில் பகிர்ந்த யோகிபாபு விஜய்க்கு நன்றி தெரிவித்து இருந்தார். தளபதி விஜய்யை தொடர்ந்து தற்போது ‘தல’யும் யோகிபாபுவுக்கு கிரிக்கெட் பேட் ஒன்றை பரிசாக வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
தல என்றால் அஜித் அல்ல கிரிக்கெட் ரசிகர்களின் ‘தல’ தோனி தான் யோகிபாபுவுக்கு கிரிக்கெட் பேட்டை பரிசாக வழங்கி இருக்கிறார். அதுவும் தன் விளையாடிய பேட்டை யோகிபாபுவுக்கு அனுப்பி வைத்துள்ளார். தோனி போன்ற லெஜண்ட்டிடம் இருந்து கிரிக்கெட் பேட் பரிசாக கிடைத்ததால் இன்ப அதிர்ச்சி அடைந்த யோகிபாபு, வீடியோ வெளியிட்டு அவருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்து உள்ளார். தற்போது யோகிபாபு தோனி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் ‘லெட்ஸ் கெட் மேரீடு’ என்கிற படத்தில் காமெடியனாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... தமிழில் தயாரிப்பாளராக களமிறங்கும் தோனி... முதல் படமே ‘லவ் டுடே’ பிரபலத்துடன் - வெளியானது மாஸ் அறிவிப்பு