"எங்க தாத்தா ஏன்டா தமன்னா கூட ஆடப்போறாரு".. வைரலான மீம் - ரஜினியை வம்புக்கு இழுக்கும் ப்ளூ சட்டை மாறன்!
பல திரைப்படங்களை விமர்சிக்கும் இளமாறன் என்கிற ப்ளூ சட்டை மாறன் இயக்கத்தில் கடந்த 2021ம் ஆண்டு Anti Indian என்ற படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.
தனது கிண்டலான பேச்சுக்கும், Strict திரைவிமர்சனத்துக்கும், அணிந்திருக்கும் நீல நிற சட்டைக்கும் பெயர் பெற்றவர் தான் இளமாறன் என்கின்ற ப்ளூ சட்டை மாறன். ஒவ்வொரு திரைப்படம் வெளியாகும் பொழுதும் இவருடைய திரை விமர்சனத்திற்காக காத்திருக்கும் ரசிகர்கள் பலர். அதே சமயம் தங்களுக்கு பிடித்தமான நடிகர்களின் படத்தை இவர் கலாய்க்கும்பொழுது வெகுண்டு எழுந்து இவரை திட்டித் தீர்க்கும் ரசிகர்களும் இணையத்தில் அதிகம் உண்டு.
அந்த வகையில், அண்மையில் ஜெயிலர் திரைப்படத்திலிருந்து வெளியான முதல் சிங்கள் Kaavalaa பாடல் பெரிய அளவில் ஹிட்டானது. தனக்கே உரித்தான ஸ்டைலில் கண்ணாடியை மாட்டி மாஸ் காட்டியிருந்தார் ரஜினிகாந்த். இந்நிலையில் அந்த பாடலில் தமன்னாவுடன் ரஜினி ஆடுவதை கிண்டல் செய்து சிலர் பதிவுகளை போட்ட நிலையில் அது சலசலப்பை ஏற்படுத்தியது.
உங்கள் வீட்டில் யாரையாவது இப்படி வயதை வைத்து கிண்டல் செய்வீர்களா? என்று கேட்க "எங்க தாத்தா ஏன்டா தமன்னா கூட டான்ஸ் ஆடப்போறாரு" என்று கூறி ரஜினிக்கு வயதாகிவிட்டது என்பது போன்ற ஒரு மீம் வைரலானது. நீங்களும் அந்த மீம்மை பார்த்திருக்க வாய்ப்புகள் அதிகம்.
தற்போது அந்த மீம் டெம்ப்லேட்டை தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்து, ரஜினியை வம்புக்கு இழுத்துள்ளார் மாறன். அடிக்கடி தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் இவ்வாறு பதிவிடுவது வழக்கம் தான். மேலும் அவர் அந்த பதிவை போட்ட சில நிமிடங்களில் ப்ளூ சட்டை மாறனை கமெண்ட் பெட்டியில் வறுத்தெடுக்க துவங்கினர் ட்விட்டர் வாசிகள்.
மாறனும் தன்னால் முடிந்த அளவு வருகின்ற அனைத்து கமெண்ட்களுக்கும் ரிப்ளை செய்து வருகின்றார். பல திரைப்படங்களை விமர்சிக்கும் இளமாறன் என்கிற ப்ளூ சட்டை மாறன் இயக்கத்தில் கடந்த 2021ம் ஆண்டு Anti Indian என்ற படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.
வினோத் இயக்கத்தில் கமல்ஹாசன் 233.. ஒரு பயோ பிக் கதையா?.. யாருடையது? - லீக் ஆனா சூப்பர் அப்டேட்!