மலையாள படத்திற்கு நகரும் திரிஷா.. அப்போ விடாமுயற்சிக்கு டாட்டா சொல்லிட்டாரா? - குழப்பத்தில் ரசிகர்கள்!
பிரபல தயாரிப்பு நிறுவனமான லைகா இந்த திரைப்படத்தை தயாரித்து வரும் நிலையில், இந்த படத்தை நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன் தான் முதலில் இயக்குவதாக இருந்தது.
கடந்த 2010ம் ஆண்டு வெளியான "முன்தினம் பார்த்தேனே" என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் திரை உலகில் அறிமுகமானவர்தான் மகிழ் திருமேனி. அதன் பிறகு தடையறத் தாக்க, மீகாமன், தடம், கழகத் தலைவன் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி புகழ்பெற்றார். ஆர்யாவின் டெடி திரைப்படத்திலும் யாதும் ஊரே யாவரும் கேளிர் திரைப்படத்திலும் மகிழ் திருமேனி நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த 13 ஆண்டுகால சினிமா பயணத்தில் இவர் இதுவறை ஐந்து திரைப்படங்களை இயக்கி வெளியிட்டுள்ளார். இந்நிலையில் இவருடைய ஆறாவது திரைப்படமாக தல அஜித்தின் "விடாமுயற்சி" திரைப்படம் உருவாகவுள்ளது. இந்த திரைப்படத்துக்காக சிறப்பு பயிற்சி எடுக்க தல அஜித் வெளிநாடு சென்றிருந்தார், மேலும் திருமேனியும், அஜித்துடன் இணைந்து இந்த படத்தின் கதையை டிஸ்க்ஸ் செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.
இந்திய அரசியல் தலைவர்கள்.. சர்ச்சையான நடிகை கஜோலின் பேச்சு - வலுத்த எதிர்ப்பால் அவர் போட்ட ட்வீட்!
பிரபல தயாரிப்பு நிறுவனமான லைகா இந்த திரைப்படத்தை தயாரித்து வரும் நிலையில், இந்த படத்தை நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன் தான் முதலில் இயக்குவதாக இருந்தது. ஆனால் அதற்குப் பிறகு மகிழ் திருமேனியிடம் இந்த படம் ஒப்படைக்கப்பட்டது. இருப்பினும் அவரிடம் ஒப்படைக்கப்பட்டு ஓராண்டு காலம் நிறைவடைந்து விட, இந்த திரைப்படம் இன்னும் படபிடிப்புக்கு வராமல் உள்ள நிலையில் இந்த திரைப்படத்தில் கதையின் நாயகியாக தோன்றவிருந்த த்ரிஷா தற்பொழுது இந்த படத்தில் இருந்து விலக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
இத்தனை நாட்களாக இந்த படத்திற்காக திரிஷா காத்திருந்தும், அவருக்கு இன்னும் அட்வான்ஸ் தொகை வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் மலையாளத்தில் டோவினோ தாமஸ் நடிக்கும் Identity என்ற திரைப்படத்தில் திரிஷா நடிக்க உள்ளார். இதை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருந்தார்.
விரைவில் அந்த படத்திற்கான படபிடிப்பு பணிகள் துவங்க உள்ள நிலையில், விடாமுயற்சி படத்தில் திரிஷா இணைவாரா? மாட்டாரா? என்பது குறித்த சந்தேகங்கள் தற்பொழுது எழுந்துள்ளது. ரசிகர்கள் அனைவரும் மகிழ் திருமேனியின் பதிலுக்காக காத்திருக்கின்றனர்.