வினோத் இயக்கத்தில் கமல்ஹாசன் 233.. ஒரு பயோ பிக் கதையா?.. யாருடையது? - லீக் ஆனா சூப்பர் அப்டேட்!

இந்த படத்தின் கதை அரசியல் களம் சார்ந்து இருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், இந்த படம் ஒரு பிரபலத்தின் பயோ பிக்காக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

Universal Hero Kamalhaasan acting in H Vinoth direction story update

சதுரங்க வேட்டை திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் எச். வினோத் என்பதை நாம் அறிவோம். அவர் இரண்டாவதாக இயக்கி வெளியிட்ட தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படம் ஒரு மிகப்பெரிய தாக்கத்தை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியது. அதன் பிறகு தொடர்ச்சியாக மூன்று திரைப்படங்கள் நடிகர் அஜித் அவருடைய நடிப்பில் அவர் இயக்கி வெளியிட்டார். 

நேர்கொண்ட பார்வை, வலிமை மற்றும் துணிவு ஆகிய மூன்று திரைப்படங்களுமே விமர்சன ரீதியாக பெரிய அளவில் பாராட்டப்பட்டது. தற்பொழுது அவருக்கு கிடைத்திருக்கும் அடுத்த வாய்ப்பு தான் உலக நாயகன் கமல்ஹாசனை இயக்குகின்ற ஒரு வாய்ப்பு. 

ஹரிஷ் கல்யாணின் LGM.. நாளை ஆடியோ மற்றும் ட்ரைலர் ரிலீஸ் - வெளியிடுபவர் உங்கள் அன்பு "தல" தோனி!

கமலஹாசன் நடிக்கும் 233வது திரைப்படத்தை எச். வினோத் இயக்க உள்ளார், இந்நிலையில் RISE to RULE என்ற வாசகம் சில தினங்களுக்கு முன்பு இந்த படத்தின் அப்டேட்டாக வெளியானது. மேலும் இந்த படத்தின் கதை அரசியல் களம் சார்ந்து இருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், இந்த படம் நெல் ஜெயராமன் அவர்களின் ஒரு பயோ பிக்காக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. 

170-க்கும் மேற்பட்ட அழிவின் விளிம்பில் இருந்த பாரம்பரிய நெல் வகைகளை மீட்டு எடுத்தவர் நெல் ஜெயராமன் என்பது நாம் அறிந்ததே. ஆனால் கடந்த 2018ம் ஆண்டு இவர் உடல்நல குறைவு காரணமாக அவர் காலமானார். தற்பொழுது நெல்லின் பெருமைகளைப் பற்றி எடுத்துரைக்கவும், நெல் ஜெயராமனின் வாழ்க்கை வரலாற்றை சிறப்பிக்கும் வண்ணமும் கமல்ஹாசன் இந்த திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

மலையாள படத்திற்கு நகரும் திரிஷா.. அப்போ விடாமுயற்சிக்கு டாட்டா சொல்லிட்டாரா? - குழப்பத்தில் ரசிகர்கள்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios