குந்தவை - வந்தியத்தேவன் இடையேயான கியூட் ரொமான்ஸ் காட்சிகளுடன் கூடிய ‘அகநக’ பாடலின் முழு வீடியோ இதோ
மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தில் இடம்பெறும் அகநக என்கிற ரொமாண்டிக் பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
மணிரத்னம் இயக்கிய பிரம்மாண்ட படமான பொன்னியின் செல்வன் 2 பாகங்களாக ரிலீஸ் ஆனது. இதன் முதல் பாகம் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் ரிலீஸ் ஆகி மாபெரும் வெற்றியை பதிவு செய்தது. இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.500 கோடிக்கு மேல் வசூலித்து இருந்தது. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் கடந்த ஏப்ரல் மாதம் 28-ந் தேதி பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்யப்பட்டது.
திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிய இப்படம் முதல் பாகம் அளவிற்கு வசூலை வாரிக்குவிக்கவில்லை. இப்படம் தற்போது வரை ரூ.350 கோடி வசூலை கூட நெருங்கவில்லை. இப்படம் ரிலீஸ் ஆகி இன்னும் ஒரு மாதம் கூட ஆகாத நிலையில், அதற்குள் அதன் முழு படமும் ஹெச்டி பிரிண்ட்டில் வெளியாகிவிட்டது. இந்த நிலையில், பொன்னியின் செல்வன் 2 படத்தில் இடம்பெறும் அகநக பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
இதையும் படியுங்கள்... புஷ்பா சர்ச்சை... ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்ட அறிக்கைக்கு ராஷ்மிகா மந்தனா போட்ட கூல் கமெண்ட்
பொன்னியின் செல்வன் 2 படத்தில் மிகவும் ரசிக்கப்பட்ட காட்சிகளில் இந்த அகநக பாடலும் ஒன்று. படத்தில் இப்பாடல் குந்தவை - வந்தியத்தேவன் இடையேயான காதல் வசனங்களுடன் இடம்பெற்றிருக்கும். ஆனால் படக்குழு தற்போது வெளியிட்டுள்ள வீடியோவில் அந்த வசனங்கள் எதுவும் இன்றி, வெளியாகி உள்ளது.
குந்தவை திரிஷா மற்றும் வந்தியத்தேவன் கார்த்தி இடையேயான கியூட்டான காதலை விவரிக்கும் வகையில் இந்த வீடியோ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. அகநக பாடலுக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து இருந்தார். இப்பாடலை சக்திஸ்ரீ கோபாலன் தன் இனிமையான குரலில் பாடி இருந்தார். இந்த பாடல் வீடியோ தான் தற்போது யூடியூப்பில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இதையும் படியுங்கள்...Watch: கிராமத்து நாயகனாக அதகளம் செய்யும் அருள்நிதி.. வைரலாகும் ‘கழுவேத்தி மூர்க்கன்’ படத்தின் மாஸ் டிரைலர் இதோ