புஷ்பா சர்ச்சை... ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்ட அறிக்கைக்கு ராஷ்மிகா மந்தனா போட்ட கூல் கமெண்ட்
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் புஷ்பா படத்தில் இடம்பெற்ற ராஷ்மிகாவின் கேரக்டர் குறித்து பேசியது சர்ச்சையானதை அடுத்து அவர் அறிக்கை மூலம் விளக்கம் அளித்து இருந்தார்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் நடிப்பில் தற்போது ஃபர்ஹானா என்கிற திரைப்படம் ரிலீஸ் ஆகி இருக்கிறது. இப்படத்தின் புரமோஷனுக்காக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்திருந்தார். அப்போது புஷ்பா படத்தில் இடம்பெற்ற ஸ்ரீவள்ளி கதாபாத்திரம் தனக்கு கிடைத்து இருந்தால் இன்னும் சிறப்பாக நடித்திருப்பேன் என கூறியதாக சர்ச்சை எழுந்தது.
ராஷ்மிகாவை மட்டம் தட்டும் வகையில் ஐஸ்வர்யா ராஜேஷ் பேசியதாக எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து இச்சம்பவம் குறித்து நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில், ஒரு நேர்காணலின் போது என்னிடம் தெலுங்கு திரையுலகில் எந்த மாதிரியான வேடங்களில் நடிக்க விரும்புகிறீர்கள் என கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளிக்கையில் எனக்கு விருப்பமான கதாபாத்திரங்கள் கிடைத்தால் நிச்சயம் தெலுங்கு படங்களில் நடிப்பேன் என்றும் உதாரணத்திற்கு புஷ்பாவில் வரும் ஸ்ரீவள்ளி கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடிக்கும் எனவும் பதிலளித்தேன். அது தவறாக புரிந்துகொள்ளப்பட்டு உள்ளது.
இதையும் படியுங்கள்... ராஷ்மிகாவின் ஸ்ரீவள்ளி கேரக்டர் பற்றி நான் கூறியது இது தான்! ஐஸ்வர்யா ராஜேஷ் கொடுத்த பரபரப்பு விளக்கம்!
புஷ்பா படத்தில் நடித்த நடிகை ராஷ்மிகாவின் கடின உழைப்பை நான் ஒருபோதும் குறைசொல்லவில்லை. இதனால் ஏற்பட்ட குழப்பத்தை நீக்குவதற்காக இந்த விளக்கத்தை அளிக்கிறேன் என அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தார். இந்நிலையில், ஐஸ்வர்யா ராஜேஷின் இந்த அறிக்கையை பார்த்த நடிகை ராஷ்மிகா மந்தனா, இதற்கு கமெண்ட் செய்துள்ளார்.
அதில், இப்போதுதான் அறிக்கையை பார்த்தேன். நீங்கள் என்ன சொன்னீர்கள் என்பதை நான் நன்றாகவே புரிந்துகொண்டேன், மேலும் இதற்காக விளக்கம் அளிக்க தேவையில்லை என்றே நான் விரும்புகிறேன், உங்கள் மீது எனக்கு அன்பும் மரியாதையும் இருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும். உங்கள் ஃபர்ஹானா படத்திற்கு வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார். அவரின் இந்த கமெண்ட் வைரலாகி வருகிறது.
இதையும் படியுங்கள்... Pichaikkaran 2 Review : பிச்சைக்காரனாக மீண்டும் ஜெயித்தாரா விஜய் ஆண்டனி? - ‘பிச்சைக்காரன் 2’ விமர்சனம் இதோ