Pichaikkaran 2 Review : பிச்சைக்காரனாக மீண்டும் ஜெயித்தாரா விஜய் ஆண்டனி? - ‘பிச்சைக்காரன் 2’ விமர்சனம் இதோ
விஜய் ஆண்டனி இயக்கி, நடித்து, இசையமைத்து இருக்கும் பிச்சைக்காரன் 2 படம் இன்று ரிலீஸ் ஆகி உள்ள நிலையில், அதன் விமர்சனத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன திரைப்படம் பிச்சைக்காரன். தாயை காப்பாற்ற பணக்கார மகன் பிச்சைக்காரனாக மாறிய கதையை படமாக்கி ரசிகர்களை கவர்ந்தார் சசி. விஜய் ஆண்டனி இந்த கதைக்கு கச்சிதமாக பொருந்தி இருந்தார். செண்டிமெண்ட், காமெடி, காதல், மாஸ் காட்சிகள் என அனைத்தும் அடங்கிய பக்கா கமர்ஷியல் பேக்கேஜாக இந்த படம் அமைந்து இருந்தது.
பிச்சைக்காரன் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின்னர், தற்போது அதன் இரண்டாம் பாகம் ரிலீஸ் ஆகி உள்ளது. இந்த படத்தை சசிக்கு பதிலாக விஜய் ஆண்டனியே இயக்கி உள்ளார். இப்படத்தின் மூலம் அவர் இயக்குனராக அறிமுகமாகி உள்ளார். விஜய் ஆண்டனி இயக்கி, நடித்து, இசையமைத்துள்ள இப்படத்தில் காவ்யா தப்பார் ஹீரோயினாக நடித்துள்ளார்.
பிச்சைக்காரன் 2 திரைப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் இன்று பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகி உள்ளது. பிச்சைக்காரன் 2 படம் பார்த்த நெட்டிசன்கள் தங்களது விமர்சனத்தை டுவிட்டரில் தொடர்ந்து பதிவிட்ட வண்ணம் உள்ளனர். அதன் தொகுப்பை தற்போது பார்க்கலாம்.
இதையும் படியுங்கள்...புதுமாப்பிள்ளை யூடியூபர் இர்பானை முதல் ஆளாக அழைத்து விருந்து கொடுத்த ஆளுநர் ஆர்.என்.ரவி - வைரலாகும் வீடியோ
ஏமாற்றம்
இது பிச்சைக்காரன் படத்தின் தொடர்ச்சி இல்லை. இது வேறுபடம். டைட்டில் பொருத்தமாக உள்ளது. படத்தில் நடித்துள்ள குழந்தைகள் சிறப்பாக நடித்துள்ளார்கள். வி.எஃப்.எக்ஸ் மோசம், தயாரிப்பு சரியில்லை. திரைக்கதை டல் அடிக்கிறது. எமோஷனலாக கனெக்ட் ஆகவில்லை. ஆண்டி பிகிலி ஐடியா சூப்பர். ஆனால் அதை காட்சிப்படுத்திய விதம் சரியில்லை. மொத்த படத்திலும் பாதி கூட விறுவிறுப்பான காட்சிகள் இல்லை. விஜய் ஆண்டனி இயக்குனராக அறிமுக படத்திலேயே ஏமாற்றம் அளித்துள்ளார்.
பார்க்கலாம்
பிச்சைக்காரன் 2 டீசண்ட்டான படமாக உள்ளது. இது முழுக்க முழுக்க விஜய் ஆண்டனியின் ஷோ. கதைக்களம் புதிதாக இல்லாமல் வழக்கமான படமாகவே உள்ளது. இன்னும் நன்றாக எடுத்திருக்கலாம். இருந்தாலும் பார்க்கக்கூடிய படமாகவே உள்ளது என பதிவிட்டுள்ளார்.
போர் அடிக்குது
முதல் பாகத்திற்கு அப்படியே எதிர்மறையாக இப்படம் உள்ளது. பணக்காரன் எப்படி ஏழைகளுக்கு உதவுகிறான் என்பதை மோசமான வி.எஃப்.எக்ஸ் மற்றும் போர் அடிக்கும் திரைக்கதை உடன் சொல்லி உள்ளார் விஜய் அண்டனி. தவிர்க்கலாம் என குறிப்பிட்டுள்ளார்.
இன்னும் நல்லா இருந்திருக்கலாம்
பிச்சைக்காரன் படத்தில் மருத்துவ துறையில் நடக்கும் முறைகேடுகளை வெளிச்சம் போட்டு காட்டியதை போல் பிச்சைக்காரன் 2 படத்தில் குழந்தை கடத்தல், மூளை மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படுவது உள்ளிட்டவை பற்றி பேசி உள்ளனர். ஆனால் படத்தை இன்னும் நல்லா எடுத்திருக்கலாம் என பதிவிட்டுள்ளார்.
பொறுமையை சோதிக்கிறது
பிச்சைக்காரன் 2 படம் ஆரம்பித்த முதல் 20 நிமிடத்திலேயே தூங்கிவிட்டதாகவும், படம் மிகவும் போர் ஆக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ள நெட்டிசன் ஒருவர், படத்தின் முதல் பாதி பொறுமையை சோதிக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.
பிச்சைக்காரன் போல் இல்லை
பிச்சைக்காரன் 2 திரைப்படம் ஜெண்டில்மேன் படம் போல சமூக கருத்துள்ள படமாக இருந்தாலும், பிச்சைக்காரன் படம் போல் எமோஷனலாக இல்லை என பதிவிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்... என்னது கத்ரீனா கைப் உடன் விவாகரத்தா?... 2-வது திருமணம் குறித்த கேள்வியால் டென்ஷன் ஆன விக்கி கவுஷல்