என்னது கத்ரீனா கைப் உடன் விவாகரத்தா?... 2-வது திருமணம் குறித்த கேள்வியால் டென்ஷன் ஆன விக்கி கவுஷல்
கத்ரீனா கைப்பை விட சிறந்த நடிகை கிடைத்தால் அவரை இரண்டாவது திருமணம் செய்துகொள்வீர்களா என எழுப்பப்பட்ட கேள்வியால் விக்கி கவுஷல் டென்ஷன் ஆகி உள்ளார்.
பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விக்கி கவுஷல். இவர் கடந்த 2021-ம் ஆண்டு பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்பை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பின்னரும் சினிமாவில் பிசியாக நடித்து வரும் விக்கி கவுஷல், தற்போது சாரா அலி கானுடன் இணைந்து 'ஜாரா ஹட்கே ஜாரா பச்கே' என்கிற படத்தில் நடித்துள்ளார். இவர்கள் இருவரும் ஜோடியாக நடிப்பது இதுவே முதல் முறை ஆகும்.
'ஜாரா ஹட்கே ஜாரா பச்கே' படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா மும்பையில் நடைபெற்றது. இதில் விக்கி கவுஷல், சாரா அலி கான் மற்றும் படத்தின் தயாரிப்பாளர் தினேஷ் விஜன் ஆகியோர் கலந்துகொண்டனர். டிரெய்லர் வெளியீட்டு விழாவில், பத்திரிகையாளர் ஒருவர் விக்கி கவுஷலிடம் திருமண வாழ்க்கை பற்றியும் இரண்டாவது திருமணம் பற்றிய அவரது எண்ணங்கள் பற்றியும் கேட்டார்.
இதையும் படியுங்கள்... பங்கமாக அடி வாங்கிய 'கஸ்டடி'..! 6 நாட்களில் படு மோசமான வசூல்.. முழு விவரம் இதோ!
அதன்படி கத்ரீனா கைப்பை விட சிறந்த நடிகை கிடைத்தால் இரண்டாவது திருமணத்தைத் தேர்ந்தெடுப்பது சரி என நினைக்கிறீர்களா? என அந்த பத்திரிகையாளர் விக்கியிடம் கேட்டார். அவரின் இந்தக் கேள்வியால் விக்கி கவுஷல் மட்டுமின்றி, அவருடன் இருந்த சாரா அலிகானும் அதிர்ச்சியடைந்தார். அந்தக் கேள்வி சாராவையும் விக்கியையும் திடுக்கிட வைத்தது.
பத்திரிகையாளரின் இந்த கோக்குமாக்கு கேள்வியால் சற்று டென்ஷன் ஆன விக்கி, “நீங்கள் என்ன கேட்கிறீர்கள்? நான் வீட்டுக்கு போக வேண்டும். ஏன் இதுபோன்ற முட்டாள்தனமான கேள்விகளைக் கேட்கிறீர்கள்? இந்த கேள்விக்கு நான் எப்படி பதில் சொல்ல முடியும்?. அடுத்த பிறவியிலும் கத்ரீனாவை விட்டுப் போக மாட்டேன். எங்களுடையது உண்மையான காதல் என்று விக்கி கூறினார். அவரின் இந்த பதில் வைரலாகி வருகிறது. சாரா அலி கானுடன் விக்கி கவுஷல் நடித்துள்ள ஜாரா ஹட்கே ஜாரா பச்கே திரைப்படம் வருகிற ஜூன் 2ஆம் தேதி வெளியாகிறது.
இதையும் படியுங்கள்... ரஜினிகாந்தின் மிரட்டல் லுக்! மகள் ஐஸ்வர்யாவுடன் லால் சலாம் ஷூட்டிங் ஸ்பாட்டில் தலைவர்! வைரலாகும் போட்டோஸ்!