நடிப்பு என்பதையும் தாண்டி இசையில் நாட்டம் கொண்டவர். தன்னைப்பற்றி சமூக வலைதளங்களில் வரும் மீம்ஸ்களை ரசித்து அதனையும் ப்ரமோட் செய்பவர்.
நடிகர் விவேக் மிகச்சிறந்த மனிதர். பண்பாளர். சமூக அக்கறை கொண்ட சீர்திருத்தவாதி. பொதுவுடமை எண்ணம் கொண்டவர் .சனாதனத்தை எதிர்த்து நயம்பட திறம்பட இந்த மக்களுக்கு புரிய வைத்த மாபெரும் கலைஞன். சின்னக்கலைவானர் எனப்போற்றப்படுபவர். நடிப்பு என்பதையும் தாண்டி இசையில் நாட்டம் கொண்டவர். தன்னைப்பற்றி சமூக வலைதளங்களில் வரும் மீம்ஸ்களை ரசித்து அதனையும் ப்ரமோட் செய்பவர்.
ஷூட்டிங் செல்லும் இடங்கள், வீட்டில் இருக்கும்போது என நடிகர் விவேக் தனது தனித்துவ ஸ்டைலை வெளிப்படுத்தும் விதமாக வீடியோக்களை எடுத்து பகிர்ந்துள்ளார். ரஜினியை விடு படுவேகமாக, அருமையாக ஸ்டைலை வெளிப்படுத்தும் வீடியோக்களின் தொகுப்பு இது...
