எப்போ சார் இந்த லிஸ்ட் முடியும்?. லியோ படத்தில் இணையும் இன்னும் சில இயக்குனர்கள் - ரத்னா குமார் சொன்னது என்ன?
பிரபல இயக்குனரும், மாஸ்டர், விக்ரம் மற்றும் லியோ திரைப்படங்களில் எழுத்தாளராகவும் பணியாற்றி வரும் ரத்தின குமார் ஒரு புதிய தகவலை தற்பொழுது வெளியிட்டுள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தில், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், அர்ஜுன், அனுராக் மற்றும் மன்சூர் அலிகான் என்று ஒரு பெரிய இயக்குனர்கள் பட்டாளமே நடித்து வருகின்றனர்.
அதேபோல இந்தியாவின் பல திரைத்துறைகளை சேர்ந்த பல முன்னணி நடிகர்களும் இந்த திரைப்படத்தில் நடித்து வருகின்றனர். உண்மையில் இவ்வளவு பெரிய நடிகர் பட்டாளத்தை எப்படி லோகேஷ் கனகராஜ் சமாளித்து வருகிறார் என்பதுதான் ஆச்சரியப்பட வைக்கும் விஷயமாக இருக்கிறது.
இந்நிலையில் பிரபல இயக்குனரும், மாஸ்டர், விக்ரம் மற்றும் லியோ திரைப்படங்களில் எழுத்தாளராகவும் பணியாற்றி வரும் ரத்தின குமார் ஒரு புதிய தகவலை தற்பொழுது வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள தகவலின்படி லியோ திரைப்படத்தில் ஏற்கனவே 5 இயக்குனர்கள் நடித்து வருகின்றனர்.
ஆனால் இந்த லிஸ்டில் இன்னும் சிலர் இணையவுள்ளார்கள் என்று கூறி ஏற்கனவே ரசிகர்களுக்கு இருக்கும் ஆர்வத்தை இன்னும் அதிகமாகியுள்ளார். D50 படத்தின் மூலம் மீண்டும் "இயக்குனர்" அவதாரம் எடுக்கவிருக்கிறார் தனுஷ் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் அவரும் படத்தில் இணைவது உறுதி என்று ரசிகர்கள் செய்திகளை பரப்பி வருகின்றனர்.
இதையும் படியுங்கள் : சிவகார்த்திகேயனின் 'மாவீரன்' சென்சார் தகவல் வெளியானது!