ரஜினிகாந்த் ஃபவுண்டேஷன் என்ற போலி முகநூல் பக்கத்தில்... வினோத பணமோசடி! காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் விதத்தில், ரஜினிகாந்த் ஃபவுண்டேஷன் என்கிற போலி முகநூல் பக்கம் தொடங்கி, வினோத முறையில் பண மோசடி நடந்து வருவதாக பரபரப்பு புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
 

Money fraud on Facebook in the name of Rajinikanth foundation

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நடிப்பை தாண்டி, ரஜினிகாந்த் ஃபவுண்டேஷன் என்கிற அறக்கட்டளை மூலம் பலருக்கு உதவி செய்து வருகிறார். அரசியலுக்கு வருவதாக ரஜினி அறிவித்த போது, இந்த அறக்கட்டளை மூலம் செய்ய பட்ட உதவிகள் அதிகம் கவனம் பெற்ற நிலையில்... தற்போதும் சைலண்டாக ரஜினி உதவி வருவதாக கூறப்படுகிறது.

Money fraud on Facebook in the name of Rajinikanth foundation

Aneethi Review: வில்லனாக மிரட்டிய அர்ஜுன் தாஸ் ஹீரோவாக ஜெயித்தாரா? அநீதி படத்தின் விமர்சனம்!

இந்நிலையில் ரஜினிகாந்த் ஃபவுண்டேஷன் அறங்காவலர், சிவராமகிருஷ்ணன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கொடுத்துள்ள புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த புகார் மனுவில், ரஜினிகாந்த் ஃபவுண்டேஷன் என்ற போலி முகநூல் பக்கத்தை தொடங்கி சிலர் பணமோசடி செய்து வருவதாக தெரிவித்துள்ளார்.  அதாவது ரூ.2 கோடி வசூல் செய்து, 200 பேருக்கு குலுக்கள் முறையில் பரிசு வழங்குவதாக வினோத மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Money fraud on Facebook in the name of Rajinikanth foundation

தனுஷ் முதல்... லோகேஷ் கனகராஜ் வரை அணிந்திருக்கும் கருங்காலி மாலைக்கு இவ்வளவு பவரா? வெற்றியின் சீக்ரெட்!

இந்த புகார் குறித்து விரைந்து விசாரணை நடத்தப்படும் என காவல் ஆணையர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் தான் ரஜினிகாந்த் லால் சலாம் படத்தின் படப்பிடிப்பை முடிந்த நிலையில், ஓய்வெடுப்பதற்காக மாலத்தீவுக்கு சென்றுள்ளார். சமீபத்தில் அவர் கடற்கரையில் வாக்கிங் செல்லும் போது எடுக்கப்பட்ட புகைப்படம் வைரலானது குறிப்பிடத்தக்கது. ரஜினிகாந்த் ஊரில் இல்லாத சமயத்தில் அவருடைய பேருக்கு களங்கம் விலைவிக்கும் விதமாக இப்படி ஒரு மோசடி நடந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios