Asianet News TamilAsianet News Tamil

"பாலியல் சீண்டலுக்கு ஆளானேன்" ரேவதி முதல்.. அன்சிபா வரை - புகார்களை அடுக்கிய மோலிவுட் நடிகைகள்!

Mollywood : தரமான பல படங்களை கொடுத்து அசத்தி வந்த கேரள திரையுலகம், இன்று மிக பயங்கரமான ஒரு சூழலில் சிக்கியுள்ளது என்றால் அது மிகையல்ல.

Mollywood actress abuse report against malayalam actors and directors ans
Author
First Published Sep 1, 2024, 7:10 PM IST | Last Updated Sep 1, 2024, 7:10 PM IST

ஹேமா கமிட்டி அறிக்கை 

நீதிபதி ஹேமாவின் தலைமையின் கீழ் ஒரு குழுவானது அமைக்கப்பட்டு, கேரள திரையுலகில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவுகள் குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டு, அது ஒரு அறிக்கையாக வெளியிடப்பட்டது. 223 பக்கம் கொண்ட அந்த அறிக்கை, நேரடியாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயனிடம் ஒப்படைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

இதற்கு காரணம், கேரள திரையுலகில் "அட்ஜஸ்ட்மென்ட்" என்பது தலைவிரித்தாடும் ஒரு கொடூரமாக மாறிவிட்டது என்று முதல்வருக்கு பல புகார்கள் பறந்ததே ஆகும். ஆகவே இந்த விஷயத்தில் முதல்வரே நேரடியாக தலையிட்டு, நீதிபதி ஹேமா தலைமையில் ஒரு கமிட்டி அமைத்து, ஒவ்வொரு நடிகையிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இப்பொது அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது.

மௌனம் கலைத்த நடிகர் மம்முட்டி! ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து பரபரப்பு கருத்து!

வாய்ப்புக்கு பாலியல் சேவை 

பொதுவாக அனைத்து திரையுலகிலும் இந்த "அட்ஜஸ்ட்மென்ட்" என்ற விஷயம் தவிர்க்கமுடியாத ஒன்றாக இருக்கின்றது என்பது தான் பரவலான கருத்து. ஆனால் கேரள திரையுலகில், நடிக்க வரும் பெண்களிடம், வாய்ப்புக்கு இணையான பாலியல் சேவைகளை வழங்க வற்புறுத்தும் விஷயம் அதிக அளவில் நடந்திருப்பதாக கூறப்படுகிறது. 

குறிப்பு : இனி வரும் தகவல்கள், குறிப்பிட்ட அந்த நடிகைகள் கூறிய கருத்துக்கள் மட்டுமே. பாலியல் சீண்டல் தொடர்பான புகார்கள் அவர்களால் அளிக்கப்பட்டுள்ளது. உண்மை நிலவரம் என்ன என்பது வெளியாகும் வரை, யாரையும் குற்றவாளியாக உறுதிப்படுத்த முடியாது.   

முதலில் வெகுண்டு எழுந்த ரேவதி சம்பத்.

இந்த விஷயத்தில் முதலில் தைரியமாக தனக்கு நடந்ததை கூறிய நடிகை ரேவதி சம்பத் தான். இவர் மலையாள திரை உலகில் நல்ல பல திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர். இவர் அளித்த தகவலின்படி "கடந்த 2016ம் ஆண்டு பிரபல மலையாள திரை உலக நடிகரும், மலையாள திரையுலக நடிகர் சங்க பொதுச் செயலாளருமான சித்திக், தன்னை ஒரு ஹோட்டலுக்கு வரச் சொன்னதாகவும், அப்போது அந்த ஹோட்டலுக்கு சென்ற தனக்கு பாலியல் தொல்லை கொடுத்து, அதை வெளியில் சொல்லக்கூடாது என்று மிரட்டியதாகவும் ரேவதி கூறினார். அது மட்டுமல்லாமல், பிரபல தமிழ் திரையுலக நடிகர் ரியாஸ் கான், தன்னிடம் அத்துமீறியதாகவும் தனது புகாரில் கூறியிருந்தார்.

Mollywood actress abuse report against malayalam actors and directors ans

அடுத்தபடியாக மேற்கு வங்கத்தை சேர்ந்த ஸ்ரீலேகா மித்ரா என்கின்ற நடிகை தனது புகாரை முன்வைத்தார். இவர் கேரள நடிகை இல்லை என்றாலும், தொடர்ச்சியாக பல கேரள திரைப்படங்களில் நடித்து வரும் அவர், பிரபல இயக்குனர் ரஞ்சித் மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்தார். கேரள சினிமா அகாடமியின் தலைவராக பதவி வகித்து வந்த அவர், ஒரு திரைப்பட படப்பிடிப்பின்போது தன்னிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியதாக புகார் கூறியுள்ளார். 

சோனியா மல்ஹார், பிரபல கேரளா திரையுலக நடிகையான இவர், கடந்த 2013ம் ஆண்டு தொடுபுழாவில் நடந்த ஒரு சம்பவம் குறித்து மனம் திறந்துள்ளார். அவர் பேசுகையில் "அவர் ஒரு பிரபல நடிகர், அந்த திரைப்படத்தில் நான் நடித்துக் கொண்டிருந்தபொழுது என்னிடம் பாலியல் ரீதியாக அத்துமீறினார். அவருடைய தொல்லை தாங்காமல் எனக்கு அழுகை வந்தது, அதை கண்ட அவர் என்னை சமாதானப்படுத்தி, என்னிடம் மன்னிப்பு கேட்டார்". 

"இதை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார். இந்த விஷயத்தை எனது கணவரிடம் சொல்லும் போது கொதித்த அவர், உடனடியாக காவல் நிலையம் சென்று அவர் மீது புகார் கொடுக்கலாம் வா என்று என்னை அழைத்தார். ஆனால் அவர் மீது நான் புகார் கொடுக்கவில்லை, காரணம் தான் செய்த செயலுக்காக அவர் மன்னிப்பு கேட்டுக்கொண்டார்" என்று கூறியிருக்கிறார் அந்த நடிகை. தன்னிடம் அத்துமீறியதாக அந்த நடிகரின் பெயரையும் அவர் குறிப்பிடவில்லை.

நடிகை கீதா விஜயன் மற்றும் நடிகை ஸ்ரீதேவிகா ஆகிய இருவரும் புகார் கொடுத்தது, துளசிதாஸ் என்கின்ற இயக்குனர் மீது. கேரள சினிமாவை பொருத்தவரை துளசிதாஸ், மிக மூத்த மற்றும் பல இளம் இயக்குனர்களுக்கு ரோல் மாடலாக திகழ்ந்துவரும் ஒரு இயக்குனர் ஆவார். கடந்த 1991ம் ஆண்டு மற்றும் 2006ம் ஆண்டு நடந்த இரு வெவ்வேறு சம்பவங்களில், தங்களுக்கு இயக்குனர் துளசிதாஸ் பாலியல் தொல்லை கொடுத்ததாக நடிகை கீதா விஜயன் மற்றும் ஸ்ரீதேவிகா ஆகிய இருவரும் புகார் அளித்துள்ளனர்.

Mollywood actress abuse report against malayalam actors and directors ans

பிரபல நடிகை மீனு முனீர், கேரளாவின் டாப் நான்கு நடிகர்கள் மீது பாலியல் புகார் அளித்தது நாம் அனைவரும் அறிந்த விஷயம் தான். பிரபல நடிகர் ஜெயசூர்யா, நடிகர் முகேஷ், நடிகர் மணியன் பிள்ளை ராஜு மற்றும் நடிகர் இடைவேளை பாபு ஆகிய நால்வரும் தனக்கு பல சமயங்களில் பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக அவர் கூறியிருந்தார். குறிப்பாக நடிகர் ஜெயசூர்யா, ஒரு முறை தான் கழிவறைக்கு சென்று வெளியே வந்த பொழுது, பின்னால் இருந்து தன்னை கட்டி அணைத்து முத்தமிட்டதாகவும், தன்னிடம் அத்துமீறியதாகவும் நடிகை மினு கூறியிருந்தார். 

இப்படி தொடர்ச்சியாக மொத்தம் 18 நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் மீது இப்பொது மலையாள திரையுலக நடிகைகள் பாலியல் புகார் அளித்துள்ளனர். இதனால் மலையாள திரையுலகின் AMMA சங்க உறுப்பினர்கள் 17 பேரும் பதவி விளக்கியுள்ள நிலையில், விசாரணை முடிவு என்னவாகும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கத்துக்கிட்ட எல்லாமே போச்சு! ஞாபக மறதியால் அவதிப்படும் நடிகை பானுப்ரியா!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios