MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • கத்துக்கிட்ட எல்லாமே போச்சு! ஞாபக மறதியால் அவதிப்படும் நடிகை பானுப்ரியா!

கத்துக்கிட்ட எல்லாமே போச்சு! ஞாபக மறதியால் அவதிப்படும் நடிகை பானுப்ரியா!

இரண்டு வருடங்களாக ஞாபக மறதியால் அவதிப்படுவதாகவும், ஒரு படப்பிடிப்பில் தனது டயலாக்கை நினைவுபடுத்திப் பேசுவதற்குக்கூட சிரமப்பட்டதாகவும் நடிகை பானுப்பிரியா தெரிவித்துள்ளார்.

1 Min read
Author : SG Balan
Published : Sep 01 2024, 07:00 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

1980களில் தனது அசாத்தியமான நடிப்புத்திறன் மற்றும் வசீகரமான தோற்றத்தால் தென்னிந்தியத் திரைப்படப் பிரியர்களைக் கவர்ந்த நடிகை பானுப்ரியா. ஐந்துக்கும் மேற்பட்ட மொழிகளில் பல பிளாக்பஸ்டர் திரைப்படங்களில் முக்கிய வேடங்களில் நடித்தார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27

ஆந்திராவைச் சேர்ந்த இவர் நடிகையாக மட்டுமின்றி திறமையான நடனக் கலைஞராகவும் ஜொலித்தார். நீண்ட காலமாக சினிமாவில் இருந்து விலகி இருந்த இவர், சமீப காலமாக சில படங்களில் அம்மா வேடங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் ஒரு தெலுங்கு சேனலுக்கு பேட்டி அளித்த பானுப்ரியா, தனக்கு ஞாபக மறதி அதிகமாகிவிட்டது என்று வேதனையுடன் கூறியுள்ளார்.

37

இரண்டு வருடங்களாக ஞாபக மறதியால் அவதிப்படுவதாகவும், ஒரு படப்பிடிப்பில் தனது டயலாக்கை நினைவுபடுத்திப் பேசுவதற்குக்கூட சிரமப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். நினைவில் கொள்ளவேண்டிய விஷயங்களை அடிக்கடி மறந்துவிடுவதால் பல சிரமங்களை அனுபவித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

47

நினைவாற்றல் குறைபாடு காரணமாக ஒரு வருடத்தில் இரண்டு அல்லது மூன்று படங்கள் மட்டுமே நடிக்க முடிகிறது என்று சொல்லி இருக்கிறார். “இப்போதெல்லாம் எனக்கு உடல்நிலை அவ்வளவு சரியில்லை. ஞாபக மறதியால் அவதிப்படுகிறேன். கற்றுக்கொண்ட விஷயங்களை எல்லாம் மறந்துவிடுகிறேன். இனி எனக்கு நடனத்தில் ஆர்வம் இல்லை. வீட்டில்கூட நடனம் பயிற்சி செய்வதில்லை’’ என்று கூறியுள்ளார்.

57

திருமணமாகி கணவருடன் அமெரிக்காவில் வசித்து வந்த பானுப்ரியா சினிமாவில் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்ற விருப்பத்தால், கணவருடன் சண்டை போட்டுவிட்டு இந்தியா திரும்பினார். ஒரு நடனப் பள்ளியைத் திறக்க வேண்டும் என்றும் கனவு கண்டார்.

67

அப்போது, பானுப்ரியா தனது கணவரை விவாகரத்து  செய்துவிட்டதாக வதந்தி பரவியது. இந்தச் சூழலில் அவரது கணவர் ஆதர்ஷ் கவுஷல் திடீரென மணரம் அடைந்ததுவிட்டார். இதனால் மனம் உடைந்த பானுப்ரியாவுக்கு உடல்நிலையும் பலவீனமானது. விவாகரத்து குறித்த செய்தி தவறானது என்றும் பானுப்பிரியா விளக்கம் அளித்தார்.

77

இப்போது வயதான நிலையில் பானுப்ரியா தனது ஒரே மகளுக்காகத்தான் வாழ்ந்து வருகிறார். மகள் அபிநயா இப்போது லண்டனில் படித்து வருகிறார். மகளுக்கு நடிப்பில் ஆர்வம் இல்லை என்றும் பேட்டியில் கூறியுள்ளார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
பானுப்ரியா

Latest Videos
Recommended Stories
Recommended image1
Top 10 Tamil Serial : சன் டிவி, விஜய் டிவிக்கு போட்டியாக TRP ரேஸில் குதித்த ஜீ தமிழ் சீரியல்... இந்த வார டாப் 10 லிஸ்ட் இதோ
Recommended image2
Con City Review : அடிபொலியாக இருந்ததா அர்ஜுன் தாஸின் கான் சிட்டி - முழு விமர்சனம் இதோ
Recommended image3
Ananthan Kaadu Review: கம்பேக் கொடுத்தாரா ஆர்யா? 'அனந்தன் காடு' விமர்சனம் இதோ!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved