மௌனம் கலைத்த நடிகர் மம்முட்டி! ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து பரபரப்பு கருத்து!
ஹேமா கமிட்டி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள ஆலோசனைகள் மற்றும் தீர்வுகளை வரவேற்கிறேன் ஆதரிக்கிறேன் என நடிகர் மம்மூட்டி தன்னுடைய கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
Hema Committee Report
பிரபல நடிகை ஒருவர் காரில் கடத்தப்பட்டு, நான்கு பேரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான சம்பவத்தை தொடர்ந்து, ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையில் கடந்த 2017 ஆம் ஆண்டு புதிய குழு ஒன்று அமைக்கப்பட்டு... மலையாள திரையுலகில் நடிகைகளிடம் அத்துமீறிய நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு புகார்கள் பதிவு செய்யப்பட்டது.
Malayala Cinema Sensational Issue
இதில் பல நடிகைகள் தானாக முன்வந்து தங்களுக்கு நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி கூறினர். இதைத் தொடர்ந்து, கடந்த 2019 ஆம் ஆண்டு கேரள அரசிடம் இதனை அறிக்கையாக சார்பித்தார் ஓய்வுபெற்ற நீதிபதி ஹேமா. சுமார் 5 வருடங்களுக்கும் பின் இந்த அறிக்கை கடந்த வாரம் வெளியிடப்பட்ட நிலையில், இதில் நடிகர் முகேஷ், திலீப், இயக்குனர் சித்திக் உள்ளிட்ட பல பிரபலங்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
'குக் வித் கோமாளி' மைம் கோபி வீட்டில் நேர்ந்த மரணம்! கண்ணீரில் மூழ்கிய குடும்பத்தினர்!
Mohan Lal
அறிக்கை வெளியாகி இரு தினங்களில் நடவடிக்கை எடுக்க கூடிய பொறுப்பில் இருக்கும் மலையாள நடிகர் சங்க தலைவரான மோகன் தான், 'AMMA' தலைமை பொறுப்பில் இருந்து விலகினார். இவரைத் தொடர்ந்து அடுத்தடுத்து அவருக்கு கீழே இருந்த 17 செயலாளர்களும் தங்களுடைய பணியை ராஜினாமா செய்தனர். மோகன்லாலின் இந்த செயல் கோழைத்தனமானது என ஒரு சில நடிகைகள் விமர்சித்து வரும் நிலையில். பலர் தங்களின் கண்டனங்களையும் வெளிப்படையாக கூறி வருகின்றனர். ஆனால் இது குறித்து மோகன்லால் தரப்பில் இருந்து எந்த ஒரு தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
Mammootty Comment Hema Committee
இந்நிலையில் தொடர்ந்து இந்த விஷயம் குறித்து மௌனம் காத்து வந்த நடிகர் மம்முட்டி, மௌனம் கலைத்து தன்னுடைய கருத்தை வெளிப்படையாக கூறியுள்ளார்.இதுகுறித்து அவர் கூறுகையில், 'ஹேமா கமிட்டி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள ஆலோசனைகள் மற்றும் தீர்வுகளை வரவேற்பதாகவும், தன்னுடைய முழு மனதுடன் அவற்றை ஆதரிப்பதாகவும் மம்மூட்டி கூறியுள்ளார். மேலும் காவல்துறை நேர்மையாக விசாரிக்கட்டும். நீதிமன்றம் தண்டனைகளை தீர்மானிக்கட்டும் என இவர் கூறி உள்ளதற்கு மலையாள நடிகைகள் பலர் தங்களின் ஆதரவை தெரிவித்து வருகிறார்கள்.
53 வயது தமிழ் நடிகையை ரூமுக்கு அழைத்தார் மோகன் லால்? கொளுத்தி போட்ட பிரபலம்!