இளையராஜா இசையில் பாரதிராஜா இயக்கிய ஆந்தாலஜி வெப் சீரிஸ் ‘மாடர்ன் லவ் சென்னை’ - ரிலீஸ் தேதி அறிவிப்பு

பாரதிராஜா, தியாகராஜன் குமாரராஜா, ராஜுமுருகன் உள்பட 6 இயக்குனர்கள் இணைந்து இயக்கிய ‘மாடர்ன் லவ் சென்னை’ என்கிற ஆந்தாலஜி வெப் தொடரின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.

Modern Love chennai new anthology series released on may 18

ஓடிடி தளங்களில் ஆந்தாலஜி படங்கள் மற்றும் வெப் தொடர்கள் அதிகளவில் வெளிவந்த வண்ணம் உள்ளன. இதற்கு முன்னர் வெளிவந்த புத்தம் புது காலை, நவரசா, பாவக் கதைகள் போன்ற ஆந்தாலஜி படங்கள் மற்றும் வெப் தொடர்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தன. இந்த நிலையில், தற்போது அடுத்ததாக ஒரு ஆந்தாலஜி வெப் தொடர் ஒன்று ரிலீசுக்கு தயாராகி வருகிறது. ஆங்கிலத்தில் பிரபலமான மாடர்ன் லவ் என்கிற வெப்தொடர் தற்போது தமிழில் மாடர்ன் லவ் சென்னை என்கிற பெயரில் எடுக்கப்பட்டு உள்ளது.

மாடர்ன் லவ் சென்னை வெப் தொடரில் மொத்தம் 6 அத்தியாயங்கள் உள்ளது. இதில் ஒவ்வொன்றையும் வெவ்வேறு இயக்குனர்கள் இயக்கி உள்ளனர். அதன்படி பாரதிராஜா, ராஜுமுருகன், தியாகராஜன் குமாரராஜா, பாலாஜி சக்திவேல், அக்‌ஷய் சுந்தர், கிஷ்ணகுமார் ராம்குமார் ஆகிய ஆறு இயக்குனர்கள் தான் இந்த மாடர்ன் லவ் சென்னை ஆந்தாலஜி வெப் தொடரை இயக்கி உள்ளனர்.

இதில் முதல் அத்தியாயமான ‘லாலா குண்டா பொம்மைகள்’ என்கிற தொடரை ராஜு முருகன் இயக்கி உள்ளார். வாசுதேவன் முரளி, ஸ்ரீ கெளரி பிரியா, வசுந்தரா ஆகியோர் நடித்துள்ள இந்த தொடருக்கு ஷான் ரோல்டன் இசையமைத்து உள்ளார்.

மாடர்ன் லவ் சென்னை ஆந்தாலஜியின் இரண்டாவது அத்தியாயமான ‘இமைகள்’ என்கிற தொடரை காதல் பட இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கி உள்ளார். அசோக் செல்வன், டிஜே பானு நடித்துள்ள இந்த சீரிஸுக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து உள்ளார்.

இதையும் படியுங்கள்... இசைப்புயல் உடன் இணைந்த வைகைப்புயல்... மாமன்னன் படத்திற்காக வடிவேலுவும், ஏ.ஆர்.ரகுமானும் செய்த தரமான சம்பவம்

Modern Love chennai new anthology series released on may 18

மூன்றாவது அத்தியாயமான ‘காதல் என்பது கண்ணுல ஹார்ட் இருக்குற எமோஜி’ என்கிற சீரிஸை கிருஷ்ணகுமார் ராம்குமார் இயக்கி இருக்கிறார். சம்யுக்தா விஸ்வநாதன், ரித்து வர்மா, பவன் அலெக்ஸ் ஆகியோர் நடித்துள்ள இந்த சீரிஸுக்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து உள்ளார்.

இந்த ஆந்தாலஜியின் நான்காவது அத்தியாயமான ‘மார்கழி’ என்கிற சீரிஸை அக்‌ஷய் சுந்தர் இயக்கி இருக்கிறார். ஸ்ரீகிருஷ்ணா தயாள், சஞ்சுளா சாரதி ஆகியோர் நடித்துள்ள இந்த சீரிஸுக்கு இளையராஜா இசையமைத்து உள்ளார்.

ஐந்தாவது அத்தியாயமான ‘பறவை கூட்டில் வாழும் மான்கள்’ என்கிற தொடரை பாரதிராஜா இயக்கி இருக்கிறார். விஜயலட்சுமி, ரம்யா நம்பீசன், கிஷோர் ஆகியோர் நடித்துள்ள இந்த சீரிஸிற்கு இளையராஜா தான் இசையமைத்து இருக்கிறார்.

மாடர்ன் லவ் சென்னை ஆந்தாலஜியின் ஆறாவது அத்தியாயமான ‘நினைவோ ஒரு பறவை’ என்கிற தொடரை தியாகராஜன் குமாரராஜா இயக்கி உள்ளார். பீபி, வாமிகா ஆகியோர் நடித்துள்ள இந்த தொடருக்கு இளையராஜா இசையமைத்து உள்ளார். இந்த ஆந்தாலஜி வெப்தொடர் வருகிற மே 18-ந் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆக உள்ளது.

இதையும் படியுங்கள்... விஜய் போட்டோவை ஏன் என்கிட்ட கொண்டுவந்த... மகனுக்காக வாய்ப்பு கேட்ட எஸ்.ஏ.சி; ரிஜெக்ட் பண்ணி அனுப்பிய பாரதிராஜா

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios